IND vs WI: படையெடுக்கும் மழை? ஈடன் கார்டனில் வானிலை எப்படி..? முழு விவரம் இதோ!

India vs West Indies Weather: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததை தொடர்ந்து, இன்றைய போட்டியில் மழை பெய்யுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மனதில் எழுகிறது. டாஸில் மாலை வெப்பநிலை தோராயமாக 27°C ஆக இருக்கும் என்றும், இரண்டாவது இன்னிங்ஸ் முன்னேறும்போது 24°C ஆகக் குறையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

IND vs WI: படையெடுக்கும் மழை? ஈடன் கார்டனில் வானிலை எப்படி..? முழு விவரம் இதோ!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

Published: 

01 Mar 2026 17:09 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) 4வது அணியாக அரையிறுதிக்கு எந்த அணி செல்லும் என்பது ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 2026 மார்ச் 1ம் தேதியான இன்று ஈடன் கார்டனில் நடைபெறும் குரூப் 1ன் கடைசி போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team), வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளில் எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்ற கேள்வி நிலவுகிறது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டால், வெஸ்ட் இண்டீஸ் அணி அவர்களின் சிறந்த நிகர ரன் விகிதத்தின் அடிப்படையில் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ALSO READ: போருக்கு தயார்.. பைபிள் கதையை சொன்ன மேற்கிந்திய தீவுகள் கேப்டன்!

வானிலை முன்னறிவிப்பு:

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததை தொடர்ந்து, இன்றைய போட்டியில் மழை பெய்யுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மனதில் எழுகிறது. டாஸில் மாலை வெப்பநிலை தோராயமாக 27°C ஆக இருக்கும் என்றும், இரண்டாவது இன்னிங்ஸ் முன்னேறும்போது 24°C ஆகக் குறையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, மழை பெய்ய ஜூரோ சதவீதம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, எந்தவித தடங்கல்களும் இன்றி, முழு போட்டியும் நடைபெறும்.

இரவு முழுவதும் ஈரப்பத அளவு 46 முதல் 69 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இரண்டாவது பந்து வீசும் அணிக்கு பனியை ஒரு காரணியாக அறிமுகப்படுத்தக்கூடும்.

மழை பெய்தால் யாருக்கு வாய்ப்பு..?


மழை பெய்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட, இந்திய அணிக்கே மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். வெஸ்ட் இண்டீஸ் அணி (+1.791) தற்போது இந்தியாவை விட (-0.100) சிறந்த ரன் ரேட்டை கொண்டுள்ளது. மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும்.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் நேருக்கு நேர்.. யார் இதுவரை ஆதிக்கம்?

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் முக்கியத்துவம் என்ன?

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இந்தப் போட்டி 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் குரூப் 1 அணிக்கான இறுதி எலிமினேட்டர் ஆகும். வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

Follow Us
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்