India vs Pakistan Asia Cup 2025: பிசிசிஐ சொன்னால்.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. இந்திய பயிற்சியாளர் சொன்ன முக்கிய விஷயம்!

India-Pakistan Clash Sparks Controversy: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய அணி பயிற்சியாளர், போட்டியில் கவனம் செலுத்துவதாகவும், பிசிசிஐயின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

India vs Pakistan Asia Cup 2025: பிசிசிஐ சொன்னால்.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. இந்திய பயிற்சியாளர் சொன்ன முக்கிய விஷயம்!

இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்

Published: 

13 Sep 2025 13:28 PM

 IST

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் (India – Pakistan) நாளை அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஆபரேஷன் சிந்தூருக்கு (Operation Sindoor) பிறகு இரு அணிகளும் முதல் முறையாக மோதுகிறது என்பதால் ஒருபுறம் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், மறுபுறம் இந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் சிலர் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், இந்திய அணியின் பயிற்சியாளர் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி தொடர்பாக முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார். இதற்கிடையில், இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த போட்டியில் வெற்றிபெற தயாராகத் தொடங்கியுள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளர் என்ன சொன்னார்?


இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசியுள்ளார். இந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதே இந்திய அணியின் கவனம் என்றும், வீரர்கள் வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை என்றும் தெரிவித்தார். அதில், “இந்த விஷயத்தில் பிசிசிஐ என்ன சொன்னாலும் நாங்கள் செய்வோம். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது என்ற முடிவை அரசாங்கமும் பிசிசிஐயும் எடுத்துள்ளன. நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்துள்ளோம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் கடுமையான போட்டி இருக்கும். எனவே இதில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.

ALSO READ: பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?

இந்தியாவில் கடும் எதிர்ப்பு:

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடர்பாக இந்தியாவில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றூம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்ததாக தெரிவித்தது. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது இரு நாட்டு விளையாட்டுகளையும் பாதித்தது. பாகிஸ்தான் ஹாக்கி அணி ஆசிய கோப்பையில் விளையாட இந்தியா வரவில்லை. அதேபோல், லெஜண்ட்ஸ் லீக்கில் நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் 2025 ஆசிய கோப்பையில், இந்திய அணி 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடும்.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார் ?

பிசிசிஐக்கு எதிராக விமர்சனம்:

பாலிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட பிசிசிஐ அனுமதி கொடுத்தது. இதனால், இந்தியர்கள் பிசிசிஐயை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்த நேரத்தில், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கும் வீடியோ வெளியானதை அடுத்து, அவர் மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்களும், ட்ரோல்களும் எழுந்தன. மேலும், இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.