IND vs NZ T20 WC Final Updates: நியூசிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற இந்தியா

India vs New Zealand T20 WC world cup 2026 Final Updates in Tamil : டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) இறுதிப் போட்டி இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் (IND vs NZ) இரவு 7:00 மணிக்கு நேருக்குநேர் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 3 முறை சந்தித்துள்ளது. இந்த 3 முறையும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது

IND vs NZ T20 WC Final Updates: நியூசிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற இந்தியா

இந்திய அணி

Updated On: 

09 Mar 2026 07:42 AM

 IST

டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) இறுதிப் போட்டி இன்று 2026 மார்ச் 8  அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் (IND vs NZ) இரவு 7:00 மணிக்கு நேருக்குநேர் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 3 முறை சந்தித்துள்ளது. இந்த 3 முறையும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.  முன்னதாக, 2007ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. பின்னர், 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்தார். இப்போது, ​​சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் கோப்பையை தூக்க முயற்சிக்கும். இதற்கிடையில், நியூசிலாந்து தனது முதல் டி20 உலகக் கோப்பை பட்டத்தை நோக்கிச் செல்லும்.

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Mar 2026 11:01 PM (IST)

    தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில்  தொடர்ச்சியாக 2வது முறை, சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி படைத்தது. முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

  • 08 Mar 2026 10:32 PM (IST)

    3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா அசத்தல்

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவிந்திரா, ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி ஆகிய 3 விக்கெட்டுகளை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை இந்திய வசம் கொண்டு வந்தார்.

  • 08 Mar 2026 10:21 PM (IST)

    நியூசிலாந்து வெற்றிபெற 42 பந்துகளில் 128 ரன்கள் தேவை

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடும் நியூசிலாந்து அணிக்கு முக்கியமான கட்டத்தில் விக்கெட் இழப்பு ஏற்பட்டுள்ளது.  17 ரன்களில் டாரில் மிட்செல் அவுட்டானார். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு 42 பந்துகளில் 128 ரன்கள் தேவைப்படுகிறது.

  • 08 Mar 2026 10:03 PM (IST)

    அர்ஷ்தீப் சிங் – மிட்செல் இடையே வாக்குவாதம்

    அர்ஷ்தீப் சிங் வீசிய 11 ஓவரில் மிட்செல் இரண்டு சிக்சர்கள் விளாசினார். இந்த நிலையில் 5 பந்தை மிட்செல் இறங்கி வந்து பவுலர் கையிலேயே அடித்தார்.  அவரை ஸ்டம்பிங் செய்ய பந்தை அர்ஷ்தீப் வீசிய நிலையில் அது மிட்செல் உடலில் பட்டது. இதனால் கோபமடைந்த மிட்செல் அர்ஷ்தீப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிட்செல்லை சமாதானப்படுத்தினார்.

  • 08 Mar 2026 09:42 PM (IST)

    23 பந்துகளில் அரைசதம் கடந்த டிம் செய்ஃபெர்ட்

    இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் செய்ஃபெர்ட் 23 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். நியூசிலாந்து அணி 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.

  • 08 Mar 2026 09:32 PM (IST)

    5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து

    256 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும் நியூசிலாந்து அணி முதல் 5 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் ஃபின் ஆலன் 9 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 1 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ளனர்.

  • 08 Mar 2026 09:21 PM (IST)

    முக்கிய விக்கெட்டை இழந்த நியூசிலாந்து

    256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வெறும் 9 ரன்களுக்கு அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.

  • 08 Mar 2026 08:45 PM (IST)

    இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 255 ரன்கள் குவிப்பு

    இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 255 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடவிருக்கிறது.

  • 08 Mar 2026 08:22 PM (IST)

    அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் – இந்திய அணியின் அதிரடிக்கு ஸ்பீட் பிரேக்கர்

    இந்திய அணியின் அதிரடி ஆட்டத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடும் விதமாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் என தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர்.

  • 08 Mar 2026 08:20 PM (IST)

    சஞ்சு சாம்சன் 89 ரன்களுக்கு ஆட்டமிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

    அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்த நிலையில் ஜேசம் நீம்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

  • 08 Mar 2026 08:19 PM (IST)

    இஷான் கிஷன் 23 பந்துகளில் அரை சதம்

    இந்திய வீரர் இஷான் கிஷன் 23 பந்துகளில் அரைசதம் குவித்துள்ளார். இதனால் 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 201 ரன்கள் குவித்துள்ளது.

  • 08 Mar 2026 08:10 PM (IST)

    சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் 6!

    இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி வருகிறார். ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் குவித்து அதிரடியாக ஆடி வருகிறார்.  இதனால் இந்திய அணி 14 ஓவர்களில் 191 ரன்கள் குவித்துள்ளது.

  • 08 Mar 2026 08:01 PM (IST)

    இந்தியா 11 ஓவர்களில் 150 ரன்கள் குவிப்பு

    சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் அதிரடி துவக்கம் தந்த நிலையில் இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

  • 08 Mar 2026 07:57 PM (IST)

    சஞ்சு சாம்சன் அரை சதம்

    சஞ்சு சாம்சன் தனது 3வது அரை சதத்தை பதிவு செய்துள்ளார். அதிரடியாக ஆடிய அவர், 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்துள்ளார்.

  • 08 Mar 2026 07:45 PM (IST)

    8 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள்

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வருகிறது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியால் இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் குவித்தது.

  • 08 Mar 2026 07:33 PM (IST)

    அபிஷேக் சர்மா அதிவேக அரைசதம்

    அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்தார். இதன் மூலம் அவர் தனது விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

  • 08 Mar 2026 07:23 PM (IST)

    அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சனின் அதிரடியில் இந்தியா 50

    அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சனின் அதிரடியில் இந்தியா அணி 4 ஓவர்களில் 52 ரன்களைக் குவித்து வருகிறது.  இதில் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என சஞ்சு சாம்சன் 24 ரன்கள் குவித்துள்ளார்.

  • 08 Mar 2026 07:19 PM (IST)

    அதிரடி காட்டும் அபிஷேக் சர்மா

    கடந்த சில போட்டிகளாக சொதப்பி வந்த அபிஷேக் சர்மா நியூசிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடி வருகிறார்.  10 பந்துகளில் 23 ரன்கள் குவித்துள்ளார்.

  • 08 Mar 2026 07:00 PM (IST)

    சென்னை மெரினாவில் கிரிக்கெட் திருவிழா

    சென்னை மெரினா கடற்கரையில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி ஒளிபரப்பை காண காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

  • 08 Mar 2026 06:43 PM (IST)

    டாஸ் வென்று நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு