Jasprit Bumrah: பணிச்சுமை! இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் விலகும் பும்ரா..? யாருக்கு வாய்ப்பு?

India vs England 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா, மூன்றாவது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது. அவரது இடத்தை அர்ஷ்தீப் சிங் அல்லது ஆகாஷ்தீப் யாரேனும் ஒருவர் களமிறங்கலாம்.

Jasprit Bumrah: பணிச்சுமை! இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் விலகும் பும்ரா..? யாருக்கு வாய்ப்பு?

ஜஸ்பிரித் பும்ரா

Published: 

26 Jun 2025 18:27 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வியை சந்தித்தது. அடுத்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) அணியில் இருப்பது முக்கியம். இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் (IND vs ENG 2nd Test) ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியில் (Indian Cricket Team) இடம்பெற மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஒரே பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே. முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும், பும்ரா விளையாடவில்லை என்றால், இந்திய அணியில் எந்த வேகப்பந்து வீச்சாளர் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏன் பும்ரா விளையாடவில்லை..?

கடந்த 2025 ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலியால் அவதிப்பட்டார். இதனால், அவருக்கு ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் 2025 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் ஒரு சில போட்டிகளில் விளையாடவில்லை. மீண்டும் காயம் ஏற்படக்கூடாது என்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பும்ரா மற்றும் பிசிசிஐ இத்தகைய முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு, இந்த தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

2வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா..?


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பும்ரா விளையாடமாட்டார். பணிச்சுமையை கருத்தில் கொண்டு, இந்த டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும். இருப்பினும், மூன்றாவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவுக்கு பதிலாக யார் களமிறங்குவார்கள்..?

ஜஸ்பிரித் பும்ரா 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது ஆகாஷ்தீப் களமிறக்கப்படலாம். அர்ஷ்தீப் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அதே நேரத்தில், ஆகாஷ்தீப் 7 டெஸ்ட் போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், அர்ஷ்தீப் நிச்சயமாக இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். அங்கு அவரது செயல்திறன் சிறப்பாக இருந்தது. எனவே, அர்ஷ்தீப் இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்புள்ளது.

Related Stories
India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?