India vs Australia 1st T20: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி.. எப்போது தொடங்குகிறது..?
India vs Australia T20 Series: அடுத்த 2026ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான தொடர் மிக முக்கியமானதாக இருக்கும். டி20 தொடர் 2025 அக்டோபர் 29 முதல் 2025 நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும்.

சூர்யகுமார் யாதவ் - மிட்செல் மார்ஷ்
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர் (India vs Australia T20 Series) இன்று அதாவது 2025 அக்டோபர் 29ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியானது ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெறும். மேலும் இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும். அடுத்த 2026ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 World Cup) இந்தத் தொடர் மிக முக்கியமானதாக இருக்கும். டி20 தொடர் 2025 அக்டோபர் 29 முதல் 2025 நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும். முதல் டி20 போட்டி கான்பெராவில் தொடங்குவதற்கு முன், கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம், பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை முன்னறிவிப்பு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி எப்போது..? A டூ Z விவரங்கள் இதோ..!
பிட்ச் யாருக்கு சாதகம்?
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதல் டி20 போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவலில் நடைபெறும். கான்பெரா பிட்ச் பொதுவாக ஸ்லோவாக இருப்பதால் ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும். இருப்பினும், ஒரு பேட்ஸ்மேன் செட் ஆனவுடன், தங்கள் ஷாட்களை அடிப்பது எளிதாகிவிடும். இங்குள்ள டி20 சர்வதேச போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 144 ரன்கள் மட்டுமே. சேசிங் செய்வது எளிதல்ல. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்யலாம்.
வானிலை எப்படி..?
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதல் டி20 போட்டியின் போது கனமழை பெய்ய வாய்ப்பில்லை, ஆனால் லேசான தூறல் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் போது வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 32 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 20 முறையும் ஆஸ்திரேலியா 11 முறை வென்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது.
இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட்ஸ்டார் ஆப் பக்கத்தில் காணலாம்.
ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!
கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங்
கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், தன்வீர் சங்கா.