IND vs AUS: இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா செல்லும்? ரோஹித் – கோலி பயணம் எப்போது..?
India Tour of Australia 2025: இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருப்பது இதுவே முதல் முறை. அணி அறிவிப்பின் போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் பேட்ஸ்மேன்களாக விளையாடுவார்கள்.

ரோஹித் சர்மா - விராட் கோலி
2025 ஆசியக் கோப்பைக்கு (2025 Asia Cup) பிறகு இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை (IND vs AUS) மேற்கொள்ள இருக்கிறது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வருகின்ற 2025 அக்டோபர் 19 முதல் 2025 நவம்பர் 8 வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் இரண்டு முறை தனித்தனியாக ஆஸ்திரேலியா புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், இந்திய வீரர்கள் எப்போது ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: முகமது ஷமி கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா? பிசிசிஐ சொல்வது என்ன..?
இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும்?
வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடர் முதலில் நடைபெறும். பிசிசிஐ வட்டாரங்களின்படி, இந்திய ஒருநாள் அணி வருகின்ற 2025 அக்டோபர் 15ம் தேதி இரண்டு தனித்தனி குழுக்களாக ஆஸ்திரேலியாவுக்கு விமானங்களில் புறப்படும். முதல் குழு காலையிலும், இரண்டாவது குழு மாலையிலும் புறப்படும். வீரர்களின் புறப்படும் நேரம் விமான டிக்கெட்டுகளில் அடிப்படையில் செல்ல இருக்கிறார்கல்.
ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் புது தில்லியில் உள்ள மற்ற வீரர்களுடன் சேர்ந்து விமானத்தில் பயணம் செய்வார்கள். இதன் பொருள் விராட் கோலி முதலில் இங்கிலாந்திலிருந்து (லண்டன்) இந்தியாவுக்குப் பயணம் செய்து பின்னர், இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருக்கிறார்கள். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி பெர்த்தில் நடைபெறும். உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக முடிவடைந்தால், ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு வீரர்களுக்கு சிறிது பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும்.
ALSO READ: மொத்தம் 8 போட்டிகள்! இந்தியா – ஆஸ்திரேலிய தொடர் எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்?
கேப்டனாக சுப்மன் கில்:
இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருப்பது இதுவே முதல் முறை. அணி அறிவிப்பின் போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் பேட்ஸ்மேன்களாக விளையாடுவார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 2027 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி விளையாட வேண்டிய ஒருநாள் போட்டிகள் மிகக் குறைவு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், 2025 ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.