இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வரலாற்று வெற்றி – இந்திய இளம் வீரர்கள் சாதனை
Cricket Milestone Achieved : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அபார வெற்றியைப் பதிவு செய்தது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று வெற்றியை இந்திய பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறது.

வலிமை வாய்ந்த அணியை அனுபவம் வாய்ந்த வீரர்கள் மட்டுமல்ல, நம்பிக்கையுடன் களமிறங்கும் இளம் வீரர்களும் வீழ்த்த முடியும் என்பதை இந்தியா இளம் பட நிரூபித்திருக்கிறது. கடந்த 2025 ஜூலை 5 ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இளம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து, 58 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த மைதானத்தில் இந்தியா முதன் முறையாக 1967-இல் டெஸ்ட் விளையாடி இங்கிலாந்தை (England) வென்றது. அதன் பின்னர் 7 போட்டிகளில் தோல்வியும், ஒரு டிராவும் மட்டுமே கிடைத்திருந்தது. ஆனால் இந்த முறை, முக்கியமான நட்சத்திரங்கள் இன்றி, புதிய வீரர்கள் நிரம்பிய இந்திய அணிதான் அதனை வென்று காட்டி சாதித்திருக்கிறது.
சுப்மன் கில்லின் தலைமையில் வீரர்களின் ஒற்றுமை, சிறப்பான பேட்டிங், பந்துவீச்சு என இந்திய அணி பது வரலாறு படைத்திருக்கிறது.. இது, 2021-ல் ஆஸ்திரேலியாவை பிரிஸ்பேனில் வீழ்த்திய India’s greatest away victories லிஸ்டில் புதியதொரு சேர்க்கையாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் வெற்றி குறித்து பிசிசிஐ எக்ஸ் பதிவு
A historic win at Edgbaston 🙌#TeamIndia win the second Test by 336 runs and level the series 1-1 👍 👍
Scorecard ▶️ https://t.co/Oxhg97g4BF #ENGvIND pic.twitter.com/UsjmXFspBE
— BCCI (@BCCI) July 6, 2025
கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது, இதன் காரணமாக ஆட்டத்தை சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், வெற்றி கையை விட்டு நழுவிவிடுமோ என்ற பயம் இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டது. மழை விட ஒருவழியாக மாலை 5:10 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முக்கிய காரணமாக அமைந்தார். முதல் அமர்விலேயே ஒல்லிலி போப் மற்றும் ஹாரி புரூக்கின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்குப் பிறகு, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் நல்ல பார்ட்னர்ஷிப் ஒன்றை உருவாக்கினர். ஆனால் மதிய உணவுக்கு சற்று முன்பு, வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்கை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். உணவு இடைவேளைக்கு பின் டீம் இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டன.
அந்த நேரம் பிரசித் கிருஷ்ணா கிறிஸ் வோக்ஸின் விக்கெட்டையும், பின்னர் ஆகாஷ் தீப், ஸ்மித்தின் விக்கெட்டையும் வீழ்த்தினர். ஸ்மித் தனது இரண்டாவது சதத்தைத் தவறவிட்டார். மற்றொரு பக்கம் ஆகாஷ் தீப் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டும் ஆகாஷிடம் சென்றது, அவர் பிரைடன் கார்ஸை மீண்டும் பெவிலியனுக்கு அனுப்பி இங்கிலாந்தை வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினார்.
வரலாறு படைத்த ஆகாஷ் தீப்
இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு முன்பு, சேதன் சர்மா 1986 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இந்த சாதனையைச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.