Yashasvi Jaiswal Century: குறைந்த வயதில் 7வது சதம்.. அதிவேக 3000 ரன்கள்! வெஸ்ட் இண்டீஸ் எதிராக கலக்கிய ஜெய்ஸ்வால்!
India vs West Indies, 2nd Test: சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 3,000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். அவர் தனது 71வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஜெய்ஸ்வால் ஒரு ஒருநாள் போட்டியில் 15 ரன்களும், 23 டி20 போட்டிகளில் 22 இன்னிங்ஸ்களில் 723 ரன்களும் எடுத்துள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
டெல்லியில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் (IND vs WI) அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரராக உள்ள வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) அற்புதமாக விளையாடி சதத்தை பதிவு செய்தார். இது யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஏழாவது டெஸ்ட் சதம். மேலும், இது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அவரது முதல் சதத்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இது அவரது இரண்டாவது சதமாகவும் பதிவானது. இந்த சதத்தின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல சிறந்த சாதனைகளைச் செய்தார். இதன்மூலம், இந்த இன்னிங்ஸ் மூலம் 3,000 சர்வதேச ரன்களையும் எட்டினார்.
சிறப்பாக விளையாட்டிய தொடக்க ஜோடி:
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு நல்ல பந்து வீச்சில் ஸ்டம்பிங் மூலம் அவுட் ஆனார். கே.எல். ராகுலுடன் அரைசத பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்ட பிறகு, ஜெய்ஸ்வால் சாய் சுதர்ஷனுடன் இணைந்து சத பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
ALSO READ: இந்தியாவிற்கு எதிராக சம்பவம் செய்த நாடின் டி கிளார்க்.. தென்னாப்பிரிக்கா அணில் திரில் வெற்றி!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7வது டெஸ்ட் சதம்:
𝘼 𝙏𝙧𝙚𝙢𝙚𝙣𝙙𝙤𝙪𝙨 𝙏𝙤𝙣 💯
Yashasvi Jaiswal with another special innings filled with grind and composure👏
Updates ▶ https://t.co/GYLslRzj4G#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @ybj_19 pic.twitter.com/DF5SbpagLI
— BCCI (@BCCI) October 10, 2025
சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 3,000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். அவர் தனது 71வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஜெய்ஸ்வால் ஒரு ஒருநாள் போட்டியில் 15 ரன்களும், 23 டி20 போட்டிகளில் 22 இன்னிங்ஸ்களில் 723 ரன்களும் எடுத்துள்ளார். இது ஜெய்ஸ்வாலின் 48வது டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். இதில் அவர் தனது ஏழாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு சதத்தையும் அவர் பெற்றுள்ளார்.
மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 3000 சர்வதேச ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:
- 69 – சுனில் கவாஸ்கர்
- 71 – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- 74 – சவுரவ் கங்குலி
- 77 – சுப்மன் கில்
- 79 – பாலி உம்ரிகர்
- 80 – விராட் கோலி
குறைந்த வயதில் அதிக சதம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தற்போது வெறும் 23 வயதே ஆகிறது. அதற்கு, அவர் ஏற்கனவே ஏழு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். இவ்வளவு இளம் வயதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 11 சதங்களுடன் அதிக சதங்களை அடித்திருந்தார். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சதங்களின் அடிப்படையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுலை முந்தியுள்ளார். இருவரும் தலா ஆறு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளனர், அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் இப்போது ஏழு சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.