India vs West Indies: இந்திய மண்ணில் நாளை முதல்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?

IND vs WI 1st Test Pitch Report: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள சிவப்பு களிமண் மைதானத்தில் நடைபெறும். இந்த மைதானம் அதிக புல்வெளிகளைக் கொண்டது என்றாலும், போட்டிக்கு முன்பு இது மேலும் வெட்டப்படும்.

India vs West Indies: இந்திய மண்ணில் நாளை முதல்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?

நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச்

Published: 

01 Oct 2025 15:00 PM

 IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (India vs West Indies) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை அதாவது 2025 அக்டோபர் 2ம் தேதி நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில், இந்திய மண்ணில் (Indian Cricket Team) விளையாடும் முதல் உள்நாட்டு டெஸ்ட் தொடர் இதுவாகும். முன்னதாக, கில் தலைமையில், இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது. ஆசிய கோப்பை அணியில் இடம்பெறாத கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ரிஷப் பண்ட் (Rishabh Pant) இல்லாத நிலையில் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக விளையாடும் XI இல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரானது, இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் தொடராகவும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் முதல் உள்நாட்டு டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது. நாளை அதாவது 2025 அக்டோபர் 2 ம் தேதி தொடங்கும் முதல் போட்டிக்கான டாஸ் காலை 9:00 மணிக்கு போடப்படும. முதல் பந்து காலை 9:30 மணிக்கும் வீசப்படும். நரேந்திர மோடி ஸ்டேடியம் கருப்பு மற்றும் சிவப்பு மண் ஆடுகளத்தைக் கொண்டுள்ளது.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய அணி எப்போது அறிவிக்க வாய்ப்பு?

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியின் பிட்ச் அறிக்கை:

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள சிவப்பு களிமண் மைதானத்தில் நடைபெறும். இந்த மைதானம் அதிக புல்வெளிகளைக் கொண்டது என்றாலும், போட்டிக்கு முன்பு இது மேலும் வெட்டப்படும். அதன்படி, சிவப்பு களிமண் பிட்ச் நல்ல பவுன்ஸ் தருகின்றன. இதன் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிக நன்மை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரின் 3வது நாளுக்கு மேல் பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகளை வழங்கலாம்.

நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 347. சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 353. அதேநேரத்தில், 3வது மற்றும் 4வது இன்னிங்ஸ்களில் ரன்கள் எடுப்பது சற்று சவாலானதாக இருக்கலாம். போட்டியின் 3வது நாளான வருகின்ற 2025 அக்டோபர் 4ம் தேதி அகமதாபாத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆடுகளத்தை மாற்றக்கூடும்.

கணிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவன்:


யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!

இந்திய அணியின் முழு விவரம்:

தேவ்தத் படிக்கல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), நாராயண் ஜெகதீப், க்ரீதீப் , க்ரீதீப், பி. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ் அணி

அலிக் அதனேஸ், பிராண்டன் கிங், ஜான் கேம்பல், கெவலான் ஆண்டர்சன், தேஜ்நாராயண் சந்தர்பால், ஜோஹன் லெய்ன், ஜஸ்டின் கிரீவ்ஸ், காரி பியர், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), டெவின் இம்லாக் (விக்கெட் கீப்பர்), ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ், ஜெடியா பிளேட்ஸ், ஜோமல் வாரிக்கன்.