IND vs WI 1st Test: ஒரே நாளில் கே.எல்.ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம்!
IND vs WI 1st Test Day 2 Highlights: இந்திய அணி 218 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது விக்கெட்டான கே.எல். ராகுலை இழந்தது. பின்னர் துருவ் ஜூரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்பேற்று ரன் குவிக்க தொடங்கினார். இந்த ஜோடி 206 ரன்கள் எடுத்த மிகப்பெரிய கூட்டணியைப் பகிர்ந்து கொண்டனர்.

கே.எல்.ராகுல் - துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா
வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. 2வது நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி இந்திய அணி (Indian Cricket Team) 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 2வது நாளான ஆட்ட நேர முடிவில் ரவீந்திர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.
இந்திய அணி ஆதிக்கம்:
Stand up and applaud 👏👏
Ravindra Jadeja’s celebration says it all 💯
Scorecard ▶️ https://t.co/MNXdZceTab#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @imjadeja pic.twitter.com/PCxiPwf1QS
— BCCI (@BCCI) October 3, 2025
இந்திய அணி இரண்டாவது நாளில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் என்ற நிலையில் மீண்டும் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. கேப்டன் சுப்மன் கில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், 47 ஆண்டுகளில் கேப்டனாக தனது முதல் சொந்த மண்ணில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் காரணமாக, சுப்மன் கில் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். இதற்கிடையில், கே.எல். ராகுல் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
ALSO READ: ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் குறித்து கருத்து.. வசமாக மாட்டிய முன்னாள் கேப்டன்!
ஜூரெல்-ஜடேஜாவும் சதம்:
இந்திய அணி 218 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது விக்கெட்டான கே.எல். ராகுலை இழந்தது. பின்னர் துருவ் ஜூரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்பேற்று ரன் குவிக்க தொடங்கினார். இந்த ஜோடி 206 ரன்கள் எடுத்த மிகப்பெரிய கூட்டணியைப் பகிர்ந்து கொண்டனர். துருவ் ஜூரெல் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இது அவரது முதல் டெஸ்ட் சதமாக பதிவானது. சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜா தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த எம்.எஸ். தோனியின் சாதனையை ஜடேஜா சமன் செய்தார். தோனியும் 6 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.
ALSO READ: கே.எல்.ராகுல் அதிரடி அரை சதம்… முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக கேப்டன் ரோஸ்டன் சேஸ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து, ஜெய்டன் சீல்ஸ், காரி பியர் மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.