IND vs USA: தொடக்கத்தில் பயம் காட்டிய அமெரிக்கா.. அசால்ட்டாக வென்ற இந்திய அணி..!

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான போட்டி இன்று அதாவது 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

IND vs USA: தொடக்கத்தில் பயம் காட்டிய அமெரிக்கா.. அசால்ட்டாக வென்ற இந்திய அணி..!

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

07 Feb 2026 23:03 PM

 IST

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான போட்டி இன்று அதாவது 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2026 டி20 உலகக் கோப்பையின் இந்தப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அமெரிக்காவின் அழைப்பின் பேரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் சொதப்பினாலும், இந்திய அணி (Indian Cricket team) முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்து போட்டியை வென்றார்.

ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக்.. ஸ்காட்லாந்தை மிரட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட்!

இந்தப் போட்டியில், டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. அமெரிக்க பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களை அடிக்கவிடாமல் தடுத்தனர். அதிரடி பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் முதல் பந்திலேயே தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும், சிறிது நேரம் போராடி திலக் வர்மா 25 ரன்களும், இஷான் கிஷன் 20 ரன்களும் எடுத்தனர். அதேநேரத்தில், இந்தியாவின் மானத்தை காப்பாற்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யா சிறப்பாக செயல்படவில்லை என்றால், இந்திய அணி 130-140 ரன்களுக்குள் சுருண்டு இருக்கும். இது ஒருவேளை அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்திருக்கலாம்.

அமெரிக்க அணியில் அதிகபட்சமாக ஷாட்லி வான் ஷால்க்விக்  இஷான் கிஷன், திலக் வர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் விக்கெட்டுகள் உட்பட 25 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்மீத் சிங்கும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ALSO READ: கேப்டனாக டி20யில் புதிய மைல்கல்.. முக்கிய பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்!

இந்தியா அசத்தல் வெற்றி:

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா பெறும் முதல் வெற்றி இதுவாகும். அதேநேரத்தில், பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் தங்கள் முதல் போட்டிகளில் வெற்றி பெற்றன. முகமது சிராஜ் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  காயமடைந்த ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக உள்ளே வந்த முகமது சிராஜ் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தியும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.

Follow Us
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்
ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட் - கலக்கத்தில் உலக நாடுகள்
இயக்குநர் ரஞ்சித் மீது வன்கொடுமை வழக்கு.. பெண்கள் அமைப்பு கடும் கண்டனம்!