Indian Cricket Team: சிக்கலில் இந்திய அணி.. ஒருநாள் கேப்டனாக யார்..? பிசிசிஐ முடிவு என்ன?
IND vs SA ODI Series: ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததாலும், கில்லின் தொடக்க இடம் காலியாக இருப்பதாலும், அணியில் தேர்வுக்குழு சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். சுப்மன் கில் இல்லாத நிலையில், ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கக்கூடும். இந்திய ஒருநாள் அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், சமநிலையை பராமரிக்க இடது கை பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது.

கே.எல்.ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) சிக்கலில் சிக்கியுள்ளது. கொல்கத்தா டெஸ்டில் கழுத்தில் காயம் அடைந்த கேப்டன் சுப்மன் கில், வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரில் இடம்பெறாமல் போகலாம். அதேநேரத்தில், துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) ஏற்கனவே காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பதால், இது இந்திய அணிக்கு அடுத்த ஒருநாள் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரேனும் கேப்டனாக நியமிக்கப்படலாம். இதையடுத்து, பிளேயிங்-11 அணியில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் என்று கணிக்கப்படுகிறது.
சுப்மன் கில்லின் காயம் இப்போது எப்படி..?
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கடுமையான கழுத்து பிடிப்பு ஏற்பட்டது. அவர் தற்போது இந்திய அணியுடன் குவஹாத்தியில் இருந்தாலும் மருத்துவ அறிக்கைகள் இன்னும் முழுமையான விளக்கத்தை தரவில்லை. பிரபல விளையாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தின்ஷா பர்திவாலா, கில்லை இன்னும் சில நாட்கள் முழுமையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், சுப்மன் கில் ஒருநாள் தொடரில் விளையாடுவது கடினம். இருப்பினும், வருகின்ற 2025 டிசம்பர் 9 முதல் தொடங்கும் டி20 தொடருக்குள் சரியாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வருகின்ற 2025 நவம்பர் கடைசி வாரம் கில்லின் உடல்நிலை மீண்டும் சரிபார்க்கப்படும்.
இந்திய தேர்வுக் குழு விரைவில் குவஹாத்தியில் கூட உள்ளது. இதில் கேஎல் ராகுல், அக்சர் படேல் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் கேப்டன் பதவிக்கு தீவிரமாக பரிசீலிக்கப்படலாம்.
ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் மிடில் ஆர்டர் பலவீனம்:
🚨 NO CRICKET ACTION FOR SHREYAS IYER FOR 2 MONTHS 🚨
– Shreyas Iyer could be out of Cricket action for at least 2 months. (Gaurav Gupta/TOI). pic.twitter.com/3wizCzXGrw
— Tanuj (@ImTanujSingh) November 22, 2025
இந்திய அணிக்கு கில் மட்டும் பிரச்சனை இல்லை, இந்திய அணியின் துணைத் கேப்டனும், மிடில் ஆர்டர் வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக அடுத்த 2-3 மாதங்களுக்கு கிரிக்கெட்டிலிருந்து விலகி இருப்பார். இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் மற்றும் தலைவர்கள் ஒரே நேரத்தில் வெளியேறுவது அணி நிர்வாகத்திற்கு ஒரு சவாலாக உள்ளது.
ALSO READ: அடுத்த ஸ்கேன் 2 மாதங்களில்.. கிரிக்கெட் களத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் வர தாமதம்..!
ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததாலும், கில்லின் தொடக்க இடம் காலியாக இருப்பதாலும், அணியில் தேர்வுக்குழு சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். சுப்மன் கில் இல்லாத நிலையில், ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கக்கூடும். இந்திய ஒருநாள் அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், சமநிலையை பராமரிக்க இடது கை பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது. எனவே, தற்போது ஒருநாள் போட்டிகளில் வழக்கமான வீரர் இல்லை என்றாலும் ரிஷப் பண்ட் அல்லது திலக் வர்மாவுக்கு 4வது இடத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். நிர்வாகம் இப்போது ரிஷப் பண்ட் ஒருநாள் வடிவத்தில் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும்.