Virat Kohli Dance: குல்தீப் எடுத்த முக்கிய விக்கெட்.. குஷியில் கோலி க்யூட் நடனம்..!
IND vs SA 3rd ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக களமிறங்கிய குயின்டன் டி காக் 106 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது இவரது 23வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரவை சமன் செய்தார்.

விராட் கோலி - குல்தீப் யாதவ்
இந்தியா – தென்னாப்பிரிக்கா (IND vs SA) இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 47.3 ஓவர்களில் 270 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக் 106 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி, பீல்டிங்கின்போது ரசிகர்கள் முன்னிலையில் நடனமாடியும், சில நேரங்களில் இமிடேட் செய்தும் ஜாலியாக இருப்பார். இந்தநிலையில், குல்தீப் யாதவ் தென்னாப்பிரிக்கா வீரர் கார்பின் பாஷை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவிற்கு 8வது விக்கெட்டை எடுத்தபோது, விராட் மற்றும் குல்தீப் ஜோடியாக நடனமாடினர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: 20 போட்டிகளில் டாஸ் லாஸ்.. இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்! கடைசியாக வென்ற கே.எல்.ராகுல்!
நடனம் ஆடும் வீடியோ வைரல்:
Virat Kohli couple dance with kuldeep yadav 😭😭😭pic.twitter.com/4VTVw0j7aZ
— JASH 🏴 (@KohliIsLove00) December 6, 2025
குல்தீப் யாதவ் மற்றும் விராட் கோலி ஜாலியான முறையில் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கார்பின் போஷின் விக்கெட்டை எடுத்த பிறகு, குல்தீப் விராட்டின் கையைப் பிடித்தார். பின்னர் இருவரும் தங்கள் ஜோடி நடனத்தால் ரசிகர்களை மகிழ்வித்தனர். இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஜாலியான தருணங்களால் நிரம்பியது. டாஸ் போட வரும்போது கே.எல். ராகுலும் உற்சாக வந்தார். அப்போது, 20 போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி டாஸ் வென்றது.
இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் விளைவாக, தென்னாப்பிரிக்க அணி 47.3 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த ஒருநாள் தொடரில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. மேலும் 3வது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக களமிறங்கிய குயின்டன் டி காக் 106 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது இவரது 23வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரவை சமன் செய்தார். இதுமட்டுமின்றி, இந்தியாவுக்கு எதிராக குயிண்டன் டி காக் தனது 7வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான அதிக ஒருநாள் சதங்கள் அடித்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையையும் குயிண்டன் டி காக் சமன் செய்தார்.