IND vs SA 2nd T20: 7 போட்டிகளில் 7 தோல்விகள்.. 210 ரன்களை துரத்தும்போது சொதப்பும் இந்திய அணி!
Indian Cricket Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் என இருவரும் பிளேயிங் லெவன் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும், இந்திய அணி தோற்றது. அதாவது, இந்த இரண்டு வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடிய போதெல்லாம், இந்திய அணி ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி
இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa T20 Series) அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி (Indian Cricket Team) வெறும் 162 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 1-1 என சமன் செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என 2லிலும் படுமோசமாக செயல்பட்டது.
ALSO READ: குறையும் ரோஹித் – விராட்டின் சம்பளம்..? கில்லுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
சொதப்பிய இந்திய அணி:
South Africa win the 2nd T20I by 51 runs.#TeamIndia will aim to come back strongly in the 3rd T20I in Dharamshala.
Scorecard ▶️ https://t.co/japA2CIofo#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/P2HOiMUPDo
— BCCI (@BCCI) December 11, 2025
டி20 போட்டிகளை பொறுத்தவரை 200 ரன்களுக்கு மேல் இலக்கு என்பது அனைத்து அணிகளுக்கும் சவாலானது. இருப்பினும், சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் 200 என்ற இலக்குகள் பல முறை துரத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை மிகப்பெரிய இலக்காக தோன்றுகிறது. அதாவது, இந்திய அணி டி20 சர்வதேச போட்டிகளில் 210+ ரன்கள் என்ற இலக்கை ஒருபோதும் வெற்றிகரமாகத் துரத்தியதில்லை. இதுவரை ஏழு முறை 210 ரன்களுக்கு மேல் இலக்குகளை அணி இந்தியா துரத்த முயற்சி செய்துள்ளது. ஆனால், ஒரு போட்டிகளில் கூட வெற்றியை துரத்தியது இல்லை.
பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுகொடுத்த பும்ரா – அர்ஷ்தீப் ஜோடி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் என இருவரும் பிளேயிங் லெவன் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும், இந்திய அணி தோற்றது. அதாவது, இந்த இரண்டு வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடிய போதெல்லாம், இந்திய அணி ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 14 போட்டிகளுக்குப் பிறகு, வெற்றி கூட்டணியின் சாதனை உடைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில், அர்ஷ்தீப் சிங் ஒரு ஓவரில் 13 பந்துகளை வீசினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டியில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் வீசிய ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கின் தேவையற்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் சமன் செய்தார். அதேநேரத்தில், பும்ரா 4 ஓவர்கள் பந்துவீசி 45 ரன்களை விட்டு கொடுத்திருந்தார்.
தென்னாப்பிரிக்காவின் பெரிய சாதனை:
இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவை அதிக முறை தோற்கடித்த அணியாக தென்னாப்பிரிக்கா அணி உருவெடுத்துள்ளது. டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா இதுவரை 13 போட்டிகளில் இந்திய அணியை தோற்கடித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தலா 12 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 10 போட்டிகளில் வென்றுள்ளன.
ALSO READ: பேட்டிங்கில் பதறிய இந்தியா.. பழிவாங்கிய மார்க்ரம் படை.. SA 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தநிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும்.