IND vs SA 1st ODI: ஒருநாள் வரலாற்றில் முதல் முறை.. ரன்களை வாரிவழங்கிய இந்திய பவுலர்கள்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
Indian Cricket Team Bowlers: 15 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், எதிரணியை 300 ரன்களைக் கடக்க அனுமதித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோன்ற ஒரு நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை. ஒரு கட்டத்தில், தென்னாப்பிரிக்கா 200 ரன்களைக் கூட எட்டாது என்று தோன்றியது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa) இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில், இந்திய அணியின் பந்துவீச்சும் கேள்விகுறியதாக உள்ளது. அதன்படி, இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கேள்விப்படாத ஒரு மோசமான சாதனையை படைத்தது. முன்னதாக, பேட்டிங் செய்த இந்திய அணி (Indian Cricket Team) தென்னாப்பிரிக்காவிற்கு 350 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆனால் இதையும் மீறி, இந்திய அணி சிறிய வித்தியாசத்தில் மட்டுமே போட்டியை வெல்ல முடிந்தது. இது இந்திய அணியின் பந்துவீச்சு தரம் எத்தகையது என்று தெரிகிறது.
ALSO READ: சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய உலக சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்
இந்திய பந்து வீச்சாளர்களின் மோசமான சாதனைகள்:
INDIA 🇮🇳 WON THE GAME BUT WHAT A FIGHTBACK BY SOUTH AFRICA 😱
From 11/3 to 332/10 !!!! Absolute madness 🔥 Great Team Spirit from the Proteas 🙌
3 MATCH SERIES | INDIA STARTS WITH 1-0 🏆#INDvSA
— CricBharat (@DilPrabhat88) November 30, 2025
350 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கம் மோசமாகவே அமைந்தது. தென்னாப்பிரிக்கா அணி தொடக்க வீரர்கள் உள்பட 11 ரன்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அடித்தளம் அமைத்தனர். பவர்பிளேயில், ஹர்ஷித் ராணா இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இருப்பினும், அதன் பிறகு தென்னாப்பிரிக்கா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 49.2 ஓவர்களில் 332 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு மிக அருகில் வந்தது. இருப்பினும், இறுதியில் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
அதாவது, 15 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், எதிரணியை 300 ரன்களைக் கடக்க அனுமதித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோன்ற ஒரு நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை. ஒரு கட்டத்தில், தென்னாப்பிரிக்கா 200 ரன்களைக் கூட எட்டாது என்று தோன்றியது. இருப்பினும், இந்திய பந்து வீச்சாளர்கள் நல்ல தொடக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.
நிறைய ரன்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளர்கள்:
இந்தப் போட்டியில் ஒவ்வொரு இந்திய பந்து வீச்சாளரும் 6 ரன்களுக்கு மேல் எகானமி ரேட்டை பெற்றிருந்தது. அதாவது, அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணாவும் 65 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணாவும் 7.2 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மறுபுறம், குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
தற்போதைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளருக்கு அனுபவம் இல்லை. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. மறுபுறம் பிரசித் கிருஷ்ணாவிற்கும் அதிக அனுபவம் கிடையாது. இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற அனுபவ பந்து வீச்சாளர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரவிருக்கும் போட்டிகள் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம்.