IND vs PAK Asia Cup 2025: புறக்கணிக்கப்பட்ட பாகிஸ்தான்.. இந்திய அணி செய்தது சரியா? தவறா..? ஐசிசி அபராதம் விதிக்குமா?

Indian Cricket Team: பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாது என்ற முடிவை இந்திய அணி எடுத்ததாகவும், இதற்கு பிசிசிஐ ஆதரித்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தினார். டாஸுக்குப் பிறகும், இரு அணிகளில் வீரர்கள் பட்டியலும் மாற்றிகொள்ளப்படவில்லை, கைகுலுக்கப்படவில்லை. இதனால், இரு நாட்டு ரசிகர்களும் அதிர்ச்சியுடன் பார்வையிட்டனர்.

IND vs PAK Asia Cup 2025: புறக்கணிக்கப்பட்ட பாகிஸ்தான்.. இந்திய அணி செய்தது சரியா? தவறா..? ஐசிசி அபராதம் விதிக்குமா?

சிவம் துபே - சூர்யகுமார் யாதவ்

Published: 

15 Sep 2025 15:08 PM

 IST

2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) நேற்று அதாவது 2025 செப்டம்பர் 15ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இந்திய அணி (India Cricket Team) ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. பாகிஸ்தான் அணி சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதிகமாக பேசப்பட்ட பிரச்சினை இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கி கொள்ளாததுதான். போட்டி தொடங்குவதற்கு முன்பாக டாஸின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவும் (Suryakumar Yadav), பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை. போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். ஆனால், அப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் அவர்களுடன் கைகுலுக்கவில்லை. தொடர்ந்து, எந்தவொரு இந்திய வீரரோ அல்லது ஊழியர்களோ பின்னர் மைதானத்திற்கு வராமல், டிரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று பூட்டி கொண்டனர்.

யார் முடிவு இது..?

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாது என்ற முடிவை இந்திய அணி எடுத்ததாகவும், இதற்கு பிசிசிஐ ஆதரித்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தினார். டாஸுக்குப் பிறகும், இரு அணிகளில் வீரர்கள் பட்டியலும் மாற்றிகொள்ளப்படவில்லை, கைகுலுக்கப்படவில்லை. இதுவும் இந்திய அணியின் முடிவுதான். இந்தநிலையில், இந்திய அணியின் இப்படியான செயலுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படுமா..? இதற்கு விதி ஏதேனும் உள்ளதா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டாஸூக்கு முன்பு கைலுக்க மறுத்த இந்திய கேப்டன்.. இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு!

பாகிஸ்தான் எதிர்ப்பு:


பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், “பாகிஸ்தான் அணி கைகுலுக்கக் காத்திருந்தது, ஆனால் இந்திய வீரர்கள் வரவில்லை. அதனால்தான் சல்மான் அலி ஆகா போட்டி முடிந்தபிறகு, செய்தியாளர் சந்திப்பிற்கு வரவில்லை” என்றார்.

ஐ.சி.சி அல்லது ஏ.சி.சி விதிகள் என்ன?

கிரிக்கெட் விதிகளில் எங்கும் கைகுலுக்குதல் கட்டாயம் என்று எழுதப்படவில்லை. டாஸின் போது அல்லது போட்டிக்குப் பிறகு, கைகுலுக்கப்படுவது விளையாட்டின் ஒரு பகுதியாகும். கிரிக்கெட்டின் உத்வேகத்தின் காரணமாகவே வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்.

இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்படுமா?

ஐசிசி அல்லது ஏசிசியில் கைகுலுக்க வேண்டும் என்ற கட்டாய விதி இல்லாதபோது, ​​இந்திய அணிக்கோ அல்லது இந்திய அணியின் எந்தவொரி வீரருக்கோ எந்த அபராதமும் விதிக்கப்படாது. இருப்பினும், இதன் போது யாராவது தவறாக நடந்து கொண்டாலோ அல்லது சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலோ, அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் நேற்றைய போட்டியில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் யாராவது வேண்டுமென்றே எதிரணி அணி அல்லது வீரருடன் கைகுலுக்கவில்லை என்றால், அது விளையாட்டின் உணர்விற்கு எதிரானது மட்டுமே என்று கருதப்படும்.

ALSO READ: பாகிஸ்தான் வீரர்களை கண்டுகொள்ளாத இந்திய அணி.. புகாரளித்த பாகிஸ்தான்!

வெற்றிக்கு பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், “சில விஷயங்கள் விளையாட்டுத் திறனை விட உயர்ந்தவை. இந்த வெற்றி இந்திய ஆயுதப் படைகளுக்கும், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டார்.