Women’s World Cup 2025: இந்திய மகளிர் அணி அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளும்? அட்டவணை இதோ!

India Women Semi-Final Fixture: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் எந்த அணியை எதிர்கொள்வது? இந்திய அணிக்கு யார் சவால் விடுவார்கள் என்ற கேள்விக்கு லீக் ஸ்டேஜ் போட்டிகளின் வெற்றியை பொறுத்து அணி நிர்ணயிக்கப்படும் என்பது தெரிய வரும்.

Women’s World Cup 2025: இந்திய மகளிர் அணி அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளும்? அட்டவணை இதோ!

இந்திய மகளிர் அணி

Published: 

24 Oct 2025 11:44 AM

 IST

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (ICC Womens World Cup) அரையிறுதிக்கு முன்னேறிய நான்காவது மற்றும் கடைசி அணியாக இந்திய அணி மாறியது. நேற்று அதாவது 2025 அக்டோபர் 23ம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் (IND W vs NZ W) அணிகளுக்கு இடையிலான போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அரையிறுதியில் இடம் பிடித்தது. இந்திய அணிக்கு முன்பாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. இந்தநிலையில், இந்திய மகளிர் அணி அரையிறுதியில் எந்த அணியை எதிர்கொள்ளும்? 2025 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணியை யார் எதிர்கொள்ளும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தொடர்ச்சியாக டக் அவுட்.. விராட் கோலிக்கு அழுத்தமா? – பதான் கேள்வி!

புள்ளிகள் பட்டியல்:


2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியா இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி, 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 6 போட்டிகளில் 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் இந்தியா, முதல் நான்கு இடங்களுக்கு அல்லது அரையிறுதிக்கு தகுதி பெற்ற கடைசி அணியாக உருவெடுத்தது.

அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தாலும், இந்த அணிகள் அனைத்தும் லீக் ஸ்டேஜில் இன்னும் ஒரு போட்டியை விளையாட வேண்டியுள்ளது. கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும், இங்கிலாந்து நியூசிலாந்தை எதிர்கொள்ளும். அதே நேரத்தில் இந்திய அணியும் கடைசியாக வங்கதேசத்தை எதிர்கொள்ளும். இந்திய அணி தனது போட்டியில் வெற்றி பெற்றாலும், அதன் நிலை மாறாது. வங்கதேச அணியை வென்ற பிறகும், அது இன்னும் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும். இருப்பினும், முதல் 3 இடங்களில் மாற்றம் ஏற்படலாம்.  ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் முதலிடத்தைப் பிடிக்க போட்டியிடலாம்.

அரையிறுதி அட்டவணை, இந்திய அணி யாரை எதிர்கொள்ளும்?

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் எந்த அணியை எதிர்கொள்வது? இந்திய அணிக்கு யார் சவால் விடுவார்கள் என்ற கேள்விக்கு லீக் ஸ்டேஜ் போட்டிகளின் வெற்றியை பொறுத்து அணி நிர்ணயிக்கப்படும். அதாவது, 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி 2025 அக்டோபர் 29ம் தேதி கவுகாத்தியில் நடைபெற உள்ளது. அங்கு இந்திய அணி விளையாட உள்ளது. போட்டியின் முதல் அரையிறுதியில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியா, புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணியை எதிர்கொள்ளும். அது ஆஸ்திரேலியாவா அல்லது தென்னாப்பிரிக்காவா என்பது நாளை அதாவது 2025 அக்டோபர் 25ம் தேதி தெரியவரும்.

ALSO READ: நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல்.. உலகக் கோப்பையில் அரையிறுதியை உறுதி செய்த இந்திய மகளிர் அணி!

போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே நடைபெறும். 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடைபெறும்.