WPL 2026: பைனலில் ஆர்சிபி! வேறு எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்?

WPL 2026 Playoff Scenarios: மகளிர் பிரீமியர் லீக் 2026 இல் 18 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இரண்டு லீக் நிலை போட்டிகள் மீதமுள்ளன. இன்று அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.

WPL 2026: பைனலில் ஆர்சிபி! வேறு எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்?

ஸ்மிருதி மந்தனா

Published: 

30 Jan 2026 17:29 PM

 IST

மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2026) 4வது பதிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) மட்டுமே பிளேஆஃப்களுக்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன், வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வதோதராவில் நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இடம் பிடித்தது. அதேநேரத்தில், மீதமுள்ள DC, GG, UPZ, மற்றும் MI நான்கு அணிகளும் இரண்டு பிளேஆஃப் இடங்களுக்கான போட்டியில் உள்ளன. அதன்படி, எந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மகளிர் பிரீமியர் லீக் 2026 இல் 18 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இரண்டு லீக் நிலை போட்டிகள் மீதமுள்ளன. இன்று அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்.

ALSO READ: பெங்களூரு அடுத்தடுத்து தோல்வி.. முன்னேறிய மும்பை.. புள்ளிகள் அட்டவணையில் யார் ஆதிக்கம்?

மகளிர் பிரீமியர் லீக் 2026 வடிவம்:

மகளிர் பிரீமியர் லீக் 2026ல் மொத்தம் 5 அணிகள் விளையாடுகின்றன. முதலில், இரட்டை ரவுண்ட்-ராபின் சுற்றில், ஒவ்வொரு அணியும் 8 போட்டிகளில் விளையாடுகின்றன. அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றன. இதன் பிறகு, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன்படி, தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது. அதனை தொடந்து, லீக் முடிவில் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள அணிகள் எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடும். தொடர்ந்து, 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ள அணிகள் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸை தோற்கடித்தால், குஜராத் மற்றும் மும்பை அணிகள் தலா 8 புள்ளிகள் பெறும். இருப்பினும், குஜராத்தின் நிகர ரன் ரேட் மைனஸ் (-0.271) ஆக இருப்பதால், மும்பை அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெறும்.

அதேநேரத்தில் மும்பை அணி தோற்றால், வருகின்ற 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி UP வாரியர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்த வேண்டும். இப்படியான சூழ்நிலையில் குஜராத் தகுதி பெறும், மற்ற அணிகள் தலா 6 புள்ளிகளைப் பெறும். மும்பை அணியின் நிகர ரன் விகிதம் (+0.146) மற்ற அணிகளை விட சிறப்பாக இருப்பதால், அவர்கள் தகுதி பெறுவார்கள்.

குஜராத் ஜெயண்ட்ஸ்:

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 புள்ளிகளையும் நிகர ரன் ரேட்டையும் -0.271 ஆகக் கொண்டுள்ளது. இது மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகளை விடக் குறைவு என்றாலும், குஜராத் இன்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், குஜராத் 10 புள்ளிகளை பெற்று பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறும்.

ஆனால் இன்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தோற்றால், 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை  UP வாரியர்ஸ் அணி வீழ்த்த வேண்டும். ஒரு வெற்றி அவர்களை குஜராத்தைப் போலவே 8 புள்ளிகளை பெறும்.

டெல்லி கேபிடல்ஸ்:

டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது 6 புள்ளிகள் மற்றும் 0.164 நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தற்போது நான்காவது இடத்தில் இருந்தாலும். இன்றைய போட்டியின் முடிவு (MI vs GG) டெல்லியை பாதிக்காது. டெல்லி அணி UP அணியை தோற்கடித்தால், டெல்லி எளிதாக எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் டெல்லி போட்டியிலிருந்து வெளியேற்றப்படும்.

ALSO READ: சொந்த ஊரில் விளையாட வந்த சாம்சன்.. விரட்டி விரட்டி கிண்டலடித்த சூர்யகுமார் யாதவ்.. வைரலாகும் வீடியோ!

UP வாரியர்ஸ்:

மகளிர் பிரீமியர் லீக் 2026 பிளேஆஃப்களை எட்டும் UP வாரியர்ஸ் பிளே ஆஃப் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியான இன்று மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், UP அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்படும். UP அணி மும்பையை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு,UP வாரியர்ஸ் டெல்லி கேபிடல்ஸை கணிசமான வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இருப்பினும், பிளேஆஃப்களை அடைய வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ