Harmanpreet Kaur: சச்சின் சொன்ன இந்த ஒரு வார்த்தை! உலகக் கோப்பையை வெல்ல காரணம்.. ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!

Sachin Tendulkar's Phone Call: 2025 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு ஹர்மன்ப்ரீத் கவுர், பல வீரர்களுடன் ஆலோசனைகளை பெற்றார். இதனை தொடர்ந்து, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து ஆலோசனை கிடைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரலாற்று இறுதி போட்டிக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கால் செய்தார்.

Harmanpreet Kaur: சச்சின் சொன்ன இந்த ஒரு வார்த்தை! உலகக் கோப்பையை வெல்ல காரணம்.. ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!

ஹர்மன்ப்ரீத் கவுர் - சச்சின் டெண்டுல்கர்

Updated On: 

08 Nov 2025 12:36 PM

 IST

2025ம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (ICC Womens World Cup 2025) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றது. ஐசிசி கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது இதுவே முதல் முறை. இந்த வெற்றியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) முக்கிய பங்கு வகித்தார். இதற்கிடையில், ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு குறிப்பிடத்தக்க ரகசியத்தை வெளியிட்டார். தற்போது, இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலக சாம்பியன் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பு, முன்னாள் வீராங்கனை சச்சின் டெண்டுல்கர் மகளிர் அணியுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்தார்.

ALSO READ: பயிற்சியின்போது பாலியல் துன்புறுத்தல்.. கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் மகளிர் வங்கதேச கேப்டன் புகார்!

சச்சின் டெண்டுல்கர் பேசியது என்ன..?


2025 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு ஹர்மன்ப்ரீத் கவுர், பல வீரர்களுடன் ஆலோசனைகளை பெற்றார். இதனை தொடர்ந்து, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து ஆலோசனை கிடைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரலாற்று இறுதி போட்டிக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கால் செய்தார். இதுகுறித்து ஹர்மன்ப்ரீத் கவுர் கூறுகையில், “ ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான இறுதிப்போட்டிக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் சாரிடமிருந்து எனக்கு போன் வந்தது. அப்போது, அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். போட்டியின்போது முடிந்தவரை சமநிலையை பேணுமாறு எங்களுக்கு அறிவுறுத்தினார். போட்டி வேகமாக நகரும்போது, அமைதியாக விளையாட முயற்சி செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் ஒரு கட்டத்தில் வேகமாக விளையாட முயற்சித்தால், தடுமாறும் அபாயம் வேண்டும்” என்றார்.

நவி மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. 16 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பிறகும், ஒரு இரவில் எல்லாம் மாறிவிட்டது என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என்று ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், “நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதெல்லாம் உலக சாம்பியன் என்றே அழைக்கிறோம். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இதுபோன்று ஏதாவது நடந்துவிடாதா என்று நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம்.

ALSO READ: மகளிர் உலகக் கோப்பையில் இனி 10 அணிகள்.. எண்ணிக்கையை அதிகரித்த ஐசிசி!

என் பெற்றோர் அங்கே இருந்தார்கள். அவர்கள் முன் உலகக் கோப்பையை வெல்வது ஒரு சிறப்பு தருணம். சிறுவயதிலிருந்தே, நான் இந்திய ஜெர்சியை அணிய விரும்பினேன், நாட்டிற்காக விளையாட விரும்பினேன், இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க விரும்பினேன், உலகக் கோப்பையை வெல்ல விரும்பினேன் என்று நான் சொல்வதை என் பெற்றோர்கள் சிறு வயது முதல் கேட்டிருக்கிறார்கள்” என்றார்.