ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மனதை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சூனியக்காரி என குற்றம் சாட்டப்பட்ட 32 வயது பெண்ணும், அவருடைய ஒரு வயது குழந்தையும் கிராம மக்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் இதில் காயமடைந்தார்.