CSK ROAR 2026: சேப்பாக்கத்தில் குவிந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்.. அடியெடுத்து வைத்த தோனி.. அதிர்ந்த அரங்கம்!
Chennai Super Kings: சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் பேட்டிங் மற்றும் பந்துவீசினர். இதன்போது, ரசிகர்கள் வீரர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தனர். அப்போது, மகேந்திர சிங் தோனி தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்து ஜாலியாக சிரித்து பேசி மகிழ்ந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரர்கள்
ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வருகின்ற 2026 மார்ச் 30ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி நிர்வாகம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களை இன்று அதாவது 2026 மார்ச் 22ம் தேதி சென்னையில் ஏம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்தது. அதன்படி சுரேஷ் ரெய்னா, முத்தையா முரளிதரன், முரளி விஜய், பத்ரிநாத், பாலாஜி, பிராவோ, அம்பத்தி ராயுடு, மேத்யூ ஹைடன், மைக் ஹசி உள்ளிட்ட பலரும் வருகை புரிந்து, சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு அடியெடுத்து வைத்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த சென்னை ரசிகர்கள் அனைவரையும் உற்சாகமாக வரவேற்றனர்.
ALSO READ: ஐபிஎல் 2026ல் மிக இளம் மற்றும் வயதான வீரர்கள் யார்? இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?
எம்.எஸ்.தோனி வருகையின்போது ஆரவாரம்:
Thala Dharisanam 🦁#Roar26 #WhistlePodu pic.twitter.com/RST5EpXKct
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2026
சென்னையில் சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ‘ரோர் 26’ நிகழ்விற்காக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நுழைந்தபோது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்தபோது பார்வையாளர்கள் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்தனர்.
பேட்டிங் மற்றும் பந்துவீசிய முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்:
Thala Reviews! 😍💛
Cuteness max! 🥰#Roar26 #WhistlePodu pic.twitter.com/AsJskoYw8J— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2026
சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் பேட்டிங் மற்றும் பந்துவீசினர். இதன்போது, ரசிகர்கள் வீரர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தனர். அப்போது, மகேந்திர சிங் தோனி தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்து ஜாலியாக சிரித்து பேசி மகிழ்ந்தார். இது ரசிகர்களின் கண்களை குளமாக்கியது.
ALSO READ: சஞ்சு, ஆயுஷ் தொடக்கம்.. மிடில் ஆர்டரில் தோனியின் மிரட்டல் அடி.. வலுவான சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
எம்.எஸ்.தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசனா..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஸ்திவாரமாக பார்க்கப்படும் எம்.எஸ்.தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. இதையடுத்து, ஐபிஎல் 2026தான் எம்.எஸ்.தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று ல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். பயிற்சிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், தோனி அனைத்து வீரர்களுடன் உற்சாகமாக விக்கெட் கீப்பிங் செய்தார். தோனி கடந்த சில சீசன்களாகவே உடற்தகுதிப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும், இதில் தனது எதிர்காலம் குறித்துக் கேட்கப்படும் போதெல்லாம் தோனி மௌனம் காத்து வருகிறார்.