India vs Bangladesh: வங்கதேசத்திற்காக முக்கிய முடிவை எடுத்த ஐசிசி..! டி20 உலகக் கோப்பைக்காக ஒப்பு கொள்ளுமா பிசிபி?

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பைக்கான அனைத்து போட்டிகளையும் இலங்கையில் நடத்த வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரி ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும், நடந்து வரும் பிரச்சனைக்கு மத்தியில் சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு வங்கதேச போட்டிகளை மாற்ற ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

India vs Bangladesh: வங்கதேசத்திற்காக முக்கிய முடிவை எடுத்த ஐசிசி..! டி20 உலகக் கோப்பைக்காக ஒப்பு கொள்ளுமா பிசிபி?

வங்கதேச கிரிக்கெட் அணி

Published: 

12 Jan 2026 11:25 AM

 IST

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கு (India vs Bangladesh) இடையிலான உறவுகள் தற்போது கணிசமான பதட்டத்தை அதிகரித்து வருகிறது. இது தற்போது கிரிக்கெட்டையும் பாதிக்கிறது. பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் விளையாட மறுத்துவிட்டது. 2026 டி20 உலகக் கோப்பைக்கான (T20 World Cup 2026) அனைத்து போட்டிகளையும் இலங்கையில் நடத்த வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரி ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், இன்னும் எந்த பதிலையும் கொடுக்கவில்லை. இருப்பினும், நடந்து வரும் பிரச்சனைக்கு மத்தியில் சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு வங்கதேச போட்டிகளை மாற்ற ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ: நியூசிலாந்து அணியில் தமிழக வீரர்… கையில் ரஜினி டாட்டூ.. யார் இந்த ஆதித்யா அசோக்?

பிரச்சனைக்கு காரணம் என்ன..?


வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, பிசிபி தலைவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ஐசிசியிடமிருந்து எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எங்கள் கவலைகளை ஆதரிக்கும் அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ALSO READ: ‘விருதுகளை அம்மாவுக்கு அனுப்புவேன்’ – விராட் கோலி சொன்ன புது விஷயம்!

மறுப்பு தெரிவிக்குமா வங்கதேசம்..?


ஐசிசியிடம் வாரியம் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளதாகவும், போட்டிகளை இந்தியாவின் வேறொரு நகரத்திற்கு மாற்றி தருவதாகவும் தெரிவித்தது. இதுகுறித்து பேசிய பிசிபி தலைவர் கூறுகையில், “எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு ஐசிசியின் பதிலுக்காக வாரியம் காத்திருக்கும். இறுதியில் இந்தியாவில் உள்ள எந்த மாற்று இடமும் இந்தியாவில் உள்ளது. ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இதுமட்டுமின்றி, நாங்கள் வங்கதேச அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். சில நாட்களுக்கு முன்பு இருந்த இடத்திலேயே நாங்கள் நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!