India Cricket Sponsorship: இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் யார்..? பிசிசிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்!

BCCI Vice President Rajiv Shukla: இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இன்று அதாவது 2025 செப்டம்பர் 13ம் தேதி கொடுத்தார். அதில், இந்திய அணி டைட்டில் ஸ்பான்ஷர் டெண்டர் செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது. பல ஏலதாரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

India Cricket Sponsorship: இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் யார்..? பிசிசிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்!

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா

Published: 

14 Sep 2025 08:30 AM

 IST

மத்திய அரசு கொண்டு வந்த ஆன்லைன் கேமிங் திருத்த மசோதாவிற்கு பிறகு, பிசிசிஐக்கும் (BCCI) ட்ரீம் 11க்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி (Indian Cricket Team) ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் ஆசிய கோப்பை 2025ல் விளையாட இருக்கிறது. இந்தநிலையில், புதிய ஜெர்சி ஸ்பான்சருக்கான டெண்டரையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய ஸ்பான்சர்ஷிப் குறித்து பிசிசிஐ ஒரு பெரிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. அதில், இந்திய அணிக்கு எப்போது புதிய ஜெர்சி ஸ்பான்சர் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது? பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பிசிசிஐக்கு கொடுத்த சூப்பர் அப்டேட்:

இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இன்று அதாவது 2025 செப்டம்பர் 13ம் தேதி கொடுத்தார். அதில், “இந்திய அணி டைட்டில் ஸ்பான்ஷர் டெண்டர் செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது. பல ஏலதாரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது இறுதி செய்யப்பட்ட பிறகு நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். 15-20 நாட்களில் இது இறுதி செய்யப்படும் என்று நினைக்கிறேன். இன்னும் எந்த பெயரும் உறுதி செய்யப்படவில்லை. நிறைய ஏலதாரர்கள் உள்ளனர். இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.” என்று தெரிவித்தார்.

ALSO READ: பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?

வரி விலக்கு பேசிய ராஜீவ் சுக்லா:


பிசிசிஐ வரி விலக்கு பெறுவது குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த ராஜீவ் சுக்லா, ”பிசிசிஐ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலவே வரி செலுத்துகிறது. அது ஜிஎஸ்டியையும் செலுத்துகிறது. அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எந்த விலக்கும் கிடைக்கவில்லை. நாங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி செலுத்துகிறோம். மாநில சங்கங்களும் வரி செலுத்துகின்றன. மேலும் நாங்கள் அரசாங்கத்திடமிருந்து ஒரு ரூபாய் மானியம் கூட வாங்குவதில்லை. நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரே சவால் என்னவென்றால், மைதானம் நிரம்பி வழிய வேண்டும். போட்டியைக் காண பெண்களும் வர வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். சம்பளமும் சமமாக வழங்கியுள்ளோம்” என்றார்.

ALSO READ: மகளிர் உலகக் கோப்பை தொடர்.. போட்டி நடக்கும் இடங்கள் என்னென்ன தெரியுமா?

முன்கூட்டியே முடிந்த ஒப்பந்தம்:

கடந்த 2023ம் ஆண்டு பிசிசிஐ மற்றும் ட்ரீம் 11 இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது மார்ச் 2026 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தம் ஆகஸ்ட் 2025ல் முடிவடைந்தது. இதற்கு காரணம், ஆன்லைன் கேமிங் திருத்தத்திற்குப் பிறகு, அனைத்து பந்தய பயன்பாடுகளும் பயனர்களிடமிருந்து பணம் எடுப்பதை நிறுத்திவிட்டன. அத்தகைய சூழ்நிலையில், இந்த பயன்பாடுகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.