India vs Pakistan Asia Cup 2025: துபாய்க்கு வராத பிசிசிஐ அதிகாரிகள்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்பா?
Asia Cup 2025: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக இந்தியாவில் நிறைய எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. முன்னதாக, ஐபிஎல் தலைவர் அருண் துமலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India – Pakistan) அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை 2025 (2025 Asia Cup) போட்டியை பார்க்காமல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி குறித்து இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு காரணம், கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இப்போது, பிசிசிஐ அதிகாரிகளும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்க இருப்பதாக தெரிகிறது.
பிசிசிஐ அதிகாரிகள் புறக்கணிக்கிறார்களா..?
கிடைத்த ஊடக தகவலின்படி, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண இதுவரை எந்தவொரு பிசிசிஐ அதிகாரிகளும் துபாய்க்கு வரவில்லை. அதேநேரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நாளை அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும், துபாயில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போட்டி நடைபெற்றது, அந்த நேரத்தில் பல பிசிசிஐ அதிகாரிகள் போட்டியைக் காண துபாய்க்கு வந்திருந்தனர்.




ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார் ?
இந்தியாவில் கடும் எதிர்ப்பு:
Country… or Cricket with Enemy?
Choice is Ours 🇮🇳#BoycottAsiaCup#AsiaCup #BCCI #IndVsPak pic.twitter.com/zWtX02AUHa— Meghna Girish 🇮🇳 (@megirish2001) September 12, 2025
ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக இந்தியாவில் நிறைய எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. முன்னதாக, ஐபிஎல் தலைவர் அருண் துமலும் இந்திய போட்டியை பார்க்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதேநேரத்தில், இந்தியா நடத்தும் மகளிர் உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா மும்முரமாக இருந்து வருவதால், அவர் பங்கேற்பது கடினம் என்று கூறப்படுகிறது.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் அதிர்ச்சி.. முழுமையாக விற்காத டிக்கெட்.. அதிருப்தியில் ரசிகர்களா?
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்:
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நிறுத்தக் கோரி 4 சட்டக் கல்லூரி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும், அந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மறுபுறம், இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்னும் முழுமையாக விற்கப்படவில்லை என்றும், எனவே இந்த முறை இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது ஸ்டேடியம் காலியாகத் தோன்றக்கூடும் என்றும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்.
கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி விவரம்:
சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), சல்மான் அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது, சுஃபியன் முகீம்.