IPL 2026: 2028 முதல் ஐபிஎல்லில் இனி 94 போட்டிகள்.. எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ திட்டம்!
IPL Number Of Matches Increase: ஐபிஎல் 2028 சீசன் முதல் போட்டித் தொடரின் வடிவத்தில் ஒரு பெரிய மாற்றத்தை பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 2028ம் ஆண்டு முதல் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது, பிளேஆஃப் போட்டிகள் உட்பட ஒரு சீசனில் 74 போட்டிகள் மட்டுமே உள்ளன. இந்த புதிய முடிவு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்பை விட மிகவும் விறுவிறுப்பான அதிக போட்டிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடத்தப்பட்டி வருகிறது. தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 சீசன் லீக்கின் 19வது சீசன் ஆகும். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) அதிகபட்சமாக தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போதைய ஐபிஎல் தலைவர் அருண் தூமல், எதிர்காலத்தில் ஐபிஎல்லில் போட்டி எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 2028 முதல், ஐபிஎல் தொடரில் 74 போட்டிகளுக்குப் பதிலாக 94 போட்டிகள் நடத்த திட்டுமிட்டுள்ளது.
ALSO READ: ஐபிஎல்லில் புகை.. ஹோட்டல்களில் விருந்தினருடன் நடை.. வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!
ஐபிஎல் 2028: போட்டிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு:
ஐபிஎல் 2028 சீசன் முதல் போட்டித் தொடரின் வடிவத்தில் ஒரு பெரிய மாற்றத்தை பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 2028ம் ஆண்டு முதல் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது, பிளேஆஃப் போட்டிகள் உட்பட ஒரு சீசனில் 74 போட்டிகள் மட்டுமே உள்ளன. இந்த புதிய முடிவு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்பை விட மிகவும் விறுவிறுப்பான அதிக போட்டிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நிலவரம் படி, ஒரு அணி லீக் சுற்றின்போது 14 போட்டிகளில் விளையாடுகிறது. இருப்பினும், 2028 முதல், ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் விளையாடும். இதன் காரணமாக எதிர்காலத்தில் இன்னும் நீண்டதாகவும், அதிக சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இது புள்ளிப் பட்டியல் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கும்.
அணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பா..?
இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் ஐபிஎல் தலைவர் அருண் தூமல் தெளிவுபடுத்தியதாவது, போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், அணிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த சீசனில் தொடர்ந்து 10 அணிகளே பங்கேற்கும். தற்போதைய சூழலில் புதிய அணிகளைச் சேர்ப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவு அல்ல என்று நிர்வாகம் கருதுவதால், 10 அணிகளைத் தக்கவைத்துக்கொண்டு போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே ஒரே வழி என்று தெரிவித்துள்ளது.
ALSO READ: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா..? சமன்பாடு சொல்வது என்ன?
போட்டியின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணம் என்ன..?
94 போட்டிகளை நடத்துவதன் உண்மையான காரணம், ‘சொந்த ஸ்டேடியம் மற்றும் வெளியூர்’ என்ற போட்டி வடிவத்தை முழுமையாகச் செயல்படுத்துவதே ஆகும்.
சொந்த மைதானம்: ஒவ்வொரு அணியும் ஒரு போட்டியைத் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடும். இரண்டாவது போட்டி எதிரணியின் சொந்த மைதானத்தில் நடைபெறும். இதன் மூலம், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 போட்டிகளில் விளையாடும். இது தொடரில் சமநிலையைப் பேண உதவும்.