AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: டெல்லியுடன் மோதும் கொல்கத்தா.. பிட்ச் யாருக்கு சாதகம்..?

DC vs KKR: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது சொந்த ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

IPL 2026: டெல்லியுடன் மோதும் கொல்கத்தா.. பிட்ச் யாருக்கு சாதகம்..?
டெல்லி - கொல்கத்தா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 May 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 8ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்ள உள்ளது. இது, நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் 51வது போட்டியாகும். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தற்போது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வெற்றிக்காக ஏங்கி வருகிறது.  அதேநேரத்தில், ஆரம்பத்தில் சொதப்பிய அஜிங்க்யா ரஹானேவின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

ALSO READ: ஐபிஎல்லில் யாரும் படைக்காத சாதனை.. பஞ்சாப்க்கு எதிராக படைத்த ஹைதராபாத்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது சொந்த ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 35 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக 19 போட்டிகளிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.

டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியம் பிட்ச் ரிப்போர்ட்:

அருண் ஜேட்லி ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் சாதகமான பிட்சாகவே அறியப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய போட்டிகளில், பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், சாதகமாக இருந்தது. இந்த ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கேப்பிடல்ஸ் அணி 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

டெல்லி கேப்பிட்டல்ஸ்

பதும் நிசாங்கா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, சமீர் ரிஸ்வி, அக்சர் படேல் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, டி நடராஜன்

இம்பாக்ட் வீரர் : கருண் நாயர்

ALSO READ: சஞ்சு சாம்சனின் அதிரடி விளையாட்டு: டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், கேமரூன் கிரீன், ரோவ்மன் பவல், மணீஷ் பாண்டே, அனுகுல் ராய், சுனில் நரைன், கார்த்திக் தியாகி, வருண் சக்ரவர்த்தி

இம்பாக்ட் வீரர் : வைபவ் அரோரா

Follow Us