IPL 2026: 10வது ஓவருக்கு பிறகு பந்து மாற்றம்.. ஐபிஎல்லில் வரும் புதிய விதி.. யாருக்கு சாதகம்?

IPL 2026 New Ball Change Rule: விதிகளின்படி, போட்டியின்போது பந்து காணாமல் போனாலோ, கண்டுபிடிக்க முடியாவிட்டாலோ அல்லது விளையாட தகுதியற்றது என அம்பயர் கருதினாலோ, அதை மாற்றலாம். இருப்பினும், மாற்றப்படும் பந்து புத்தம் புதிய பந்தாக இருக்காது. அது பழைய பந்தை போலவே அதே தேய்மான நிலையில் இருக்கும்.

IPL 2026: 10வது ஓவருக்கு பிறகு பந்து மாற்றம்.. ஐபிஎல்லில் வரும் புதிய விதி.. யாருக்கு சாதகம்?

ஐபிஎல்லில் பந்து மாற்றம்

Published: 

24 Mar 2026 19:06 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனுக்கான (IPL 2026) கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. ஒவ்வொரு வருடத்தையும் போலவே, இந்த சீசனிலும் சில புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் சேர்க்கப்படவுள்ளன. இம்பாக்ட் பிளேயர் போன்ற பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், போட்டிகளை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில், 10வது ஓவருக்கு பிறகு பந்துவீசும் அணி வேறொரு பந்தை மாற்றி கொள்ளலாம் என்ற ஒரு புதிய விதி செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தநிலையில், இந்த விதி யாருக்கு சாதகம்..? இந்த விதி ஐபிஎல்லில் பந்துவீச்சாளருக்கு நன்மை பயக்குமா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பயிற்சியின்போது கால் வலி.. நடப்பதில் சிரமம்.. எம்.எஸ்.தோனி முழுமையாக விளையாடுவாரா?

புதிய பந்து மாற்றி தரப்படுமா?

விதிகளின்படி, போட்டியின்போது பந்து காணாமல் போனாலோ, கண்டுபிடிக்க முடியாவிட்டாலோ அல்லது விளையாட தகுதியற்றது என அம்பயர் கருதினாலோ, அதை மாற்றலாம். இருப்பினும், மாற்றப்படும் பந்து புத்தம் புதிய பந்தாக இருக்காது. அது பழைய பந்தை போலவே அதே தேய்மான நிலையில் இருக்கும். அதேபோல், பந்து மாற்றப்படும்போது அம்பயர் பேட்ஸ்மேன் மற்றும் பீல்டிங் செய்யும் அணியின் கேப்டனிடம் காண்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் இதைத் தவிர, இரண்டாவது இன்னிங்ஸ் பந்து மாற்றம் தொடர்பாக ஒரு முக்கியமான விதி உள்ளது, இது போட்டிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன்படி, இரவு நேரப் போட்டிகளில், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும் அணி 10வது ஓவருக்குப் பிறகு பந்து மாற்றத்தைக் கோரலாம். இருப்பினும், இந்த மாற்றத்தை ஒரு முறை மட்டுமே கோர முடியும். ஏனெனில், இரவு நேரப் போட்டிகளில் பனிப்பொழிவு காரணமாக பந்து அடிக்கடி ஈரமாகி, களத்தில் நிற்கும் அணிக்குச் சிக்கல்களை உருவாக்குகிறது. இதைக் கருத்தில் கொண்டே இந்த விதி உருவாக்கப்பட்டது.

அம்பயரின் விருப்பத்தின்கீழ் மாற்றம்:

ALSO READ: ஐபிஎல் 2026-ல் அமல்படுத்தப்படவுள்ள 7 புதிய விதிகள் இவைதான்!

நிபந்தனையின்படி, பீல்டிங் செய்யும் அணி, 10வது ஓவர் முடிந்த பிறகுதான் பந்து மாற்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட முடியும். பிற ஓவரின் நடுவில் இது அனுமதிக்கப்படாது. மேலும், இந்த சூழ்நிலையில் பீல்டிங் செய்யும் அணிக்கு புதிய பந்து வழங்கப்படாது. மாறாக ஏறக்குறைய அதே நிலையில் உள்ள மாற்று பந்து வழங்கப்படும். 10வது ஓவருக்கு பிறகு பந்தின் நிலை மோசமடைந்தால், அம்பயர் தனது விருப்பப்படி பந்தை மாற்ற முடிவு செய்யலாம் என்பதும் தெளிவாகிறது.

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்