T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்.. மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் வங்கதேசம்..?
ICC-BCB Controversy: வருகின்ற 2031 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை வங்கதேசம் பெற்றுள்ளது. தற்செயலாக இதையும் இந்தியாவுடன் இணைந்து நடத்துகிறது. இப்போது, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஐ.சி.சி ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், போட்டியை நடத்தும் உரிமையை வங்கதேச வாரியத்திடம் இருந்து பறிக்கப்படலாம்.

வங்கதேச கிரிக்கெட் அணி
ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இருந்த முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கியதால் கோபமடைந்த வங்கதேச அரசாங்கம், 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆகியவற்றுடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மோதல்போக்கில் உள்ளது. டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து ஐசிசி பலமுறை வற்புறுத்தல் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தபோதிலும், வங்கதேச அரசு 2026 டி20 உலகக் கோப்பைக்காக தனது அணியை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதன் காரணமாக, வங்கதேச அணிக்கு உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதுடன் மில்லியன் கணக்கான வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, ஒரு பெரிய போட்டியை நடத்தும் வாய்ப்பையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இழக்க இருக்கிறது.
ALSO READ: கட்டாயத்தால் டெஸ்டில் இருந்து கோலி ஓய்வு.. முன்னாள் கிரிக்கெட்டர் அடுக்கிய புகார்!
பிசிபி வைத்த கோரிக்கை என்ன..?
ஐபிஎல்லில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மானை விலக்க பிசிசிஐ எடுத்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வரமாட்டோம் என்று தெரிவித்தது. மேலும், தங்களது போட்டிகளை இலங்கைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ மாற்ற வேண்டும் என்று பிசிபி கோரியது. இதுதொடர்பாக, பிசிசிஐ மற்றும் ஐசிசி வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை சம்மதிக்க வைத்தன. இதை எதையும் பிசிபி கேட்காத பட்சத்தில் இறுதியாக, ஐசிசி, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, வங்கதேசம் விளையாடினால், அது இந்தியாவில் விளையாட வேண்டும், இல்லையெனில் வேறு அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்தியது.
வங்கதேசம் போட்டியை நடத்தும் உரிமையை இழக்குமா?
2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் தனது உலகக் கோப்பை இடத்தை இழந்தது மட்டுமின்றி, ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பை வழங்கியது. மேலும் இவை அனைத்தையும் தாண்டி, வங்கதேசம் ஒரு குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்திக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது. அதுதான் உலகக் கோப்பை போன்அ ஐ.சி.சி போட்டிகளை நடத்துவது இழக்க வேண்டிய சூழல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசம் டி20 உலகக் கோப்பையை நடத்தியது. அதற்கு முன்னதாக, 2011 உலகக் கோப்பையையும் இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்தியது.
வருகின்ற 2031 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை வங்கதேசம் பெற்றுள்ளது. தற்செயலாக இதையும் இந்தியாவுடன் இணைந்து நடத்துகிறது. இப்போது, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஐ.சி.சி ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், போட்டியை நடத்தும் உரிமையை அவர்களிடமிருந்து பறிக்கப்படலாம். இது நடந்தால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றொரு பெரிய வருவாய் வாய்ப்பை இழப்பை சந்திக்கும்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து.. எந்தக் குழுவில் இடம் பெறும்?
கோடிக்கணக்கில் இழப்பா..?
வங்கதேசம் ஐ.சி.சி.யிடமிருந்து பல்வேறு அபராதங்களை எதிர்கொள்ள இருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மறுத்தால், ஐ.சி.சி.யிடமிருந்து வங்கதேச வருடாந்திர வருவாய் சுமார் 3.25 பில்லியன் வங்கதேச டாக்கா என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கணிசமான அபராதமாகக் கழிக்கப்படலாம். மேலும், போட்டியில் பங்கேற்று ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றதற்காக அது பெறும் பரிசுத் தொகையையும் இழக்க நேரிடும். இதனால் வங்கதேச மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியைப் பாதிக்கலாம், அடுத்த சில ஆண்டுகளுக்கு ஐசிசி போட்டிகளில் இருந்து தடை செய்யப்படலாம்.