BPL 2026: பிபிஎல்-ஐ புறக்கணித்த வீரர்கள்.. வங்கதேசத்தில் நிலவும் குழப்பம்.. பதவி விலகுவாரா பிசிபி தலைவர்?
Bangladesh Premier League: முன்னதாக நஸ்முல் ஹசன், வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகினால் நஷ்டம் ஏற்படுவது வீரர்களுக்குதான், வாரியத்திற்கு நல்ல என்றும், வங்கதேசத்தின் புகழ்பெற்ற வீரர் தமீம் இக்பாலை ‘இந்திய ஏஜெண்ட்’ என்றும் கூறினார். இது வங்கதேச கிரிக்கெட் வீரர்களை கோபப்படுத்தியது.

வங்கதேச பிரீமியர் லீக்
வங்கதேச பிரீமியர் லீக் (Bangladesh Premier League) தொடரின் முதல் போட்டியில் இன்று அதாவது 2026 ஜனவரி 15ம் தேதி சிட்டகாங் ராயல்ஸ் அணியும், நோகாலி எக்ஸ்பிரஸ் அணியும் விளையாட இருந்தது. ஆனால், இரு அணிகளும் டாஸ் போட ஸ்டேடியத்திற்கு வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போட்டி தொடங்க முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு டாஸ் போட திட்டமிடப்பட்டு, உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கு, வங்கதேச கிரிக்கெட் வாரிய (BCB) தலைவர், முன்னாள் கிரிக்கெட் வீரரை இந்தியாவின் ஏஜெண்ட் என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசத்தில் உள்ள வீரர்கள் எந்தவொரு போட்டியிலும் விளையாட மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: 4 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம்.. ஒருநாள் தரவரிசையில் ’கிங்’ கோலி டாப்..!
என்ன பிரச்சனை..?
The Bangladesh cricket crisis deepens: The first BPL match today – between Chattogram Royals and Noakhali Express – has been delayed after both teams did not arrive at the venue for the toss
Follow the story: https://t.co/mzRjJeiasB pic.twitter.com/OjPEaXB2bH
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 15, 2026
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மோதல் போக்கில் இருந்தது வருகிறது. இதற்கிடையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் மோதல் நிலவி வருகிறது. இதனால், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கத்திற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது, மேலும் வீரர்கள் சங்கம், BCB நிதிக் குழுவின் தலைவர் நஸ்முல் ஹசன் பதவி விலக வேண்டும் என்று கோருகிறது. நஸ்முல் ஹசன் நீக்கப்படும் வரை களத்தில் இறங்க மாட்டோம் என்று வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கம் கூறிவருகின்றனர்.
முன்னதாக நஸ்முல் ஹசன், வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகினால் நஷ்டம் ஏற்படுவது வீரர்களுக்குதான், வாரியத்திற்கு நல்ல என்றும், வங்கதேசத்தின் புகழ்பெற்ற வீரர் தமீம் இக்பாலை ‘இந்திய ஏஜெண்ட்’ என்றும் கூறினார். இது வங்கதேச கிரிக்கெட் வீரர்களை கோபப்படுத்தியது. டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் செல்லும் முடிவில் எச்சரிக்கையாக இருக்கவும், கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கவும் தமீம் வாரியத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.
ALSO READ: அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா.. இன்று முதல் அண்டர் 19 உலகக் கோப்பை தொடக்கம்!
இது தொடர்பாக BCB நிதிக் குழுவின் தலைவர் நஸ்முல் ஹசன் இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும், வங்கதேசத்தின் அனுபவ கிரிக்கெட் வீரர்கள் அனைத்து வகையான விளையாட்டுகளையும் புறக்கணிப்பதாக தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தஸ்கின் அகமது முதல் முஸ்தாபிசுர் ரஹ்மான் வரை பிசிபி தலைவர் நஸ்முல் ஹசனுக்கு எதிராக தனது கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.