Rohit Sharma Records: பொறுமையுடன் அரைசதம்.. பதட்டமில்லாமல் பல சாதனை படைத்த ரோஹித் சர்மா!

Australia vs India 2nd ODI: ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அடிலெய்டில் தனது இன்னிங்ஸின் மூலம், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்.

Rohit Sharma Records: பொறுமையுடன் அரைசதம்.. பதட்டமில்லாமல் பல சாதனை படைத்த ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா

Published: 

23 Oct 2025 14:44 PM

 IST

ஆஸ்திரேலியா – இந்தியா (IND vs AUS) இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், அதன்பின் தனது அதிரடியை தொடர்ந்து அரைசதம் கடந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். மேலும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார். அடிலெய்டில் தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடிய ரோஹித் சர்மா, ஏராளமான சாதனைகளை படைத்து, ஒரு பெரிய உலக சாதனையை முறியடித்தார். அப்படி என்ன சாதனையை ரோஹித் சர்மா படைத்தார் என்பதை தெரிந்து கொள்வோம்.

59வது அரைசதம்:


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 97 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்தார். இதில், 74 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இது ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 59வது அரைசதமாகும். முன்னதாக, அவர் அங்கு விளையாடிய ஆறு ஒருநாள் போட்டிகளில் 131 ரன்கள் எடுத்திருந்தார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 43 ஆகும்.

ALSO READ: பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. சுப்மன் கில்லை அலறவிட்ட ரசிகர்!

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்:

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அடிலெய்டில் தனது இன்னிங்ஸின் மூலம், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை ரோஹித் முறியடித்தார்.

ரோஹித் சர்மா இப்போது ஒருநாள் போட்டிகளில் 11,249 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட்டில் 11,221 ரன்கள் எடுத்திருந்த கங்குலியின் சாதனையை முந்தினார். இந்த பட்டியலில் 14,181 ரன்களுடன் விராட் கோலி 2வது இடத்திலும், 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் உள்ளனர்.

2 பெரிய சாதனைகள்:

அடிலெய்டில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா இந்த சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், SENA நாட்டில் 150 சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார்.

ALSO READ: தொடர்ந்து 2வது முறையாக டக் அவுட்.. கை அசைத்து சென்ற கோலி.. ஓய்வு முடிவா..?

அதிக சிக்ஸர் அடித்த 2வது பேட்ஸ்மேன்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் ரோஹித் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் 346 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.