T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
Australia Cricket Team: இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா குரூப் பி-யில் உள்ளது. இந்தக் குழுவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஓமன் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் அடங்கும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026க்கான (ICC Womens Cricket T20 World Cup) 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா (Australia Cricket Team) அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாத 3 வீரர்களை அணியில் எடுத்துள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன், ஆல்ரவுண்டர் கூப்பர் கான்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் அடங்குவர். இது தவிர, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் போன்ற நட்சத்திர ஆல்ரவுண்டர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: டி20 உலகக் கோப்பை முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை.. இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!
ஆஸ்திரேலிய டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்த பேட் கம்மின்ஸ்:
ஆஸ்திரேலியாவின் டி20 உலகக் கோப்பை 2026 அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இணைந்துள்ளார். இது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். அதே நேரத்தில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் இந்திய ஆடுகளங்களில் அணியின் பந்துவீச்சு தாக்குதலை மேலும் வலுப்படுத்தலாம். அதன்படி, டி20 உலகக் கோப்பைக்கான வலுவான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் போட்டி எப்போது?
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா குரூப் பி-யில் உள்ளது. இந்தக் குழுவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஓமன் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் அடங்கும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும். ஆஸ்திரேலியா அதன் குழுவில் வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்பனமாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது போட்டி 2026 பிப்ரவரி 16ம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெறும். அந்த அணி 2026 பிப்ரவரி 20ம் தேதி ஓமனுக்கு எதிராக தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடும்.
அதற்கு முன், 2026 பிப்ரவரி 13ம் தேதி ஜிம்பாப்வேயையும் எதிர்கொள்ளும். இந்த 2026 ஆண்டு டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் 8க்கு முன்னேறும். அதன் பிறகு நாக் அவுட் போட்டிகள் தொடங்கும்.
ALSO READ: கில் விளையாடுவாரா? பும்ராவுக்கு ஓய்வா? நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு?
2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கான்லி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ குன்மேன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.