Asia Cup 2025: ஓமனுக்கு எதிரான போட்டி..! இந்திய அணிக்கு இவ்வளவு முக்கியமானதா..? புது சாதனையுடன் களம்!

Indian Cricket Team: சர்வதேச டி20 வடிவத்தில் அதிக போட்டிகளில் விளையாடியதற்கான சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 275 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. ஓமனுக்கு எதிரான இந்த போட்டியின் மூலம், இந்திய அணி 250 போட்டிகளில் 2வது இடத்தை தக்கவைக்கும்.

Asia Cup 2025: ஓமனுக்கு எதிரான போட்டி..! இந்திய அணிக்கு இவ்வளவு முக்கியமானதா..? புது சாதனையுடன் களம்!

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

19 Sep 2025 15:14 PM

 IST

2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி இதுவரை 2 வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், இன்று அதாவது 2025 செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் ஓமனை எதிர்கொள்கிறது. ஓமனுக்கு எதிரான இந்த போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு (Indian Cricket Team) ஒரு சிறப்பு போட்டியாக இருக்க போகிறது. ஏனெனில், இது இந்திய அணியின் 250வது சர்வதேச டி20 போட்டியாகும். அதன்படி, உலக கிரிக்கெட் அரங்கில் இத்தனை டி20 போட்டிகளை விளையாடிய 2வது அணி என்ற சாதனையை இந்திய அணி படைக்கவுள்ளது. இதன் முழுமையான விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

எந்த அணி முதலிடத்தில் உள்ளது..?


சர்வதேச டி20 வடிவத்தில் அதிக போட்டிகளில் விளையாடியதற்கான சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 275 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. ஓமனுக்கு எதிரான இந்த போட்டியின் மூலம், இந்திய அணி 250 போட்டிகளில் 2வது இடத்தை தக்கவைக்கும். அதேநேரத்தில், நியூசிலாந்து அணி இதுவரை 235 சர்வதேச போட்டிகளில் விளையாடி, இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 228 போட்டிகளுடன் 4வது இடத்திலும், இலங்கை அணி 212 போட்டிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.

ALSO READ: டி20யில் அனைத்திலும் நம்பர் 1.. பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதலிடம்!

இந்திய அணியின் பேட்டிங் வரிசை:

2025 ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்பு இந்திய அணி தங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாகும். இந்த போட்டியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கங்களை வழங்கி வருகிறார். அதே நேரத்தில், சுப்மன் கில் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறந்த ஃபார்மில் உள்ள நிலையில், திலக் வர்மாவும் ரன்கள் குவிப்பார் என்று நம்பப்படுகிறது. மிடில் ஆர்டரில் ஹர்டிக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பேட்டிங் பயிற்சி செய்ய நல்ல வாய்ப்பைப் பெறலாம்.

பந்து வீச்சாளர்களின் உத்தி:


2025 ஆசிய கோப்பையில் இதுவரை இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு முக்கிய ஆயுதம். ஆனால் சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யலாம். அப்படி நடந்தால், அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்ஷித் ராணா என இவர்களில் யாருக்காவது வாய்ப்பு கிடைக்கலாம். சுழற்பந்து வீச்சில், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி சுழற்சி முறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ALSO READ: ஆசிய கோப்பை போட்டியில் அதிர்ச்சி.. இலங்கை வீரருக்கு நடந்த சோக சம்பவம்!

சூப்பர்-4 க்கு முந்தைய போட்டி ஏன் முக்கியம்..?

இந்திய அணி நிர்வாகம் ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து, ஒரு பெரிய ஸ்கோரை இலக்காகக் கொண்டு, 20 ஓவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும். சூப்பர் 4 கட்டத்தில் இந்தியா 7 நாட்களில் 4 போட்டிகளில் விளையாட வேண்டியிருப்பதால் இது மிகவும் முக்கியமானது. எனவே, இந்த போட்டி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் ஒரு பயிற்சி அமர்வாக இருக்கும்.