Suryakumar Yadav: அனைத்திற்கும் தயார்…! பாகிஸ்தான் பெயரை தவிர்த்த சூர்யகுமார் யாதவ்..!

India vs Pakistan Super 4: ஓமனுக்கு எதிரான போட்டியின் வெற்றிக்குபிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குத் தயாரா என்று சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பேசியது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Suryakumar Yadav: அனைத்திற்கும் தயார்...! பாகிஸ்தான் பெயரை தவிர்த்த சூர்யகுமார் யாதவ்..!

சூர்யகுமார் யாதவ்

Published: 

20 Sep 2025 11:33 AM

 IST

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) குரூப் ஏ கடைசி லீக் போட்டியில் இந்தியாவும், ஓமன் அணியும் மோதியது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கு எளிதாக தோன்றினாலும், பந்துவீச்சி, பேட்டிங் என ஓமன் அணி இரண்டிலும் இந்திய அணிக்கு கடுமையாக சோதித்தது. இந்திய அணி (Indian Cricket Team) ஏற்கனவே சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்ததால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தது. பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கடைசி வரை பேட்டிங் செய்யாமல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தார். இந்தநிலையில், வெற்றிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் சூப்பர் 4ல் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். தற்போது, இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ALSO READ: ஒரே போட்டியில் 2 முறை.. ஒரே பந்துவீச்சாளரிடம் ஒரே மாதிரி அவுட்டான ஹர்திக், அர்ஷ்தீப்!

சூப்பர் 4ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி:


ஓமனுக்கு எதிரான போட்டியின் வெற்றிக்குபிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குத் தயாரா என்று சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பேசிய சூர்யகுமார் யாதவ், “நாங்கள் சூப்பர் 4ல் விளையாட முழுமையாக தயாராக இருக்கிறோம்.” என்றார்.

தொடர்ந்து ஓமன் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “ஓமன் அணி சிறப்பாக கிரிக்கெட் விளையாடியது. அவர்களின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னியுடன் அவர்களின் தயாரிப்பு கடுமையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அவர்கள் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, நான் அதை முழுமையாக ரசித்தேன்.

அடுத்த போட்டியிலிருந்து 11வது எண் வரை காத்திருக்காமல் இருக்க நான் நிச்சயமாக முயற்சிப்பேன். இந்தப் போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும், எங்கள் பேட்டிங் ஆழத்தை அறிய விரும்புகிறோம். சூப்பர் ஃபோர்ஸுக்கு முன்னேறுவதற்கு முன்பு அனைவரும் சிறிது நேரம் விளையாடுவது முக்கியம் என்று நினைத்தோம்.” என்றார்.

ALSO READ: இந்தியாவை ஓரங்கட்ட முயற்சித்த ஓமன்.. கடைசி நேரத்தில் கரை சேர்ந்து சூர்யா படை வெற்றி!

இந்தியாவின் சூப்பர் 4 போட்டிகள்

இந்தியா இப்போது சூப்பர் ஃபோர் சுற்றில் மூன்று முக்கிய போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி 2025 செப்டம்பர் 21ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறுகிறது, இது போட்டியின் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2025 செப்டம்பர் 24ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராகவும், 2025 செப்டம்பர் 26ம் தேதி இலங்கைக்கும் எதிராக மோதும். குழு நிலையில் இலங்கையும் தோல்வியடையாமல் இருந்தது. இந்த போட்டி மிகவும் சவாலான போட்டியாக அமைந்தது.