India – Pakistan Asia Cup 2025: இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் தொடரும் சர்ச்சை.. போட்டியை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம்!
Asia Cup 2025: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிக்கு மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பும் (FWICE) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என்று கோரி சோனி டிவி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு FWICE ஒரு கடிதம் அனுப்பியுள்ளது .

2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) இந்தியாவும் பாகிஸ்தானும் (India – Pakistan) நாளை அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன . இரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மிகுந்த உற்சாகத்தை தூண்டியுள்ளது என்றாலும், மறுபுறம் இந்தியர்கள் சிலர் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்த 2025ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றிய விவாதத்திற்கு ஒரு சிறப்பு காரணம் உள்ளது . பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் நடத்திய தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் சூழ்நிலை காரணமாக , விளையாட்டுத் துறையில் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிளம்பிய எதிர்ப்புகள்:
FWICE writes to PM Modi, urges to stop telecast of IND-PAK Asia Cup clash, calling it an “affront to the memory of our martyrs”
Read @ANI Story | https://t.co/auxlxm4rI4#FWICE #INDvsPAK #PMModi #cricket #AsiaCup pic.twitter.com/dam8k32Cnx
— ANI Digital (@ani_digital) September 13, 2025
2025 ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறுவதை இந்திய மக்கள் விரும்பவில்லை. இருப்பினும் , இதுபோன்ற எதிர்ப்புகள் கிளம்பியபோதிலும் , இந்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டிக்கு பச்சைக்கொடி காட்டியது. இந்திய அரசாங்கம் மற்றும் பிசிசிஐ முடிவு முக்கியமானது என்றாலும், இது மக்களிடையே கோபத்தை உண்டாக்கியது. ஆசிய கோப்பையை புறக்கணிக்கவும் என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.




ALSO READ: துபாய்க்கு வராத பிசிசிஐ அதிகாரிகள்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்பா?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிக்கு மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பும் (FWICE) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என்று கோரி சோனி டிவி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு FWICE ஒரு கடிதம் அனுப்பியுள்ளது .
அந்தக் கடிதத்தில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலையும் குறிப்பிடப்பட்டுள்ளது . அதில், “பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 40 இந்தியர்களின் தியாகம் இன்னும் ஒவ்வொரு இந்தியரின் இதயங்களையும் ஆழமாகத் தொடுகிறது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புவது நமது இந்தியர்களின் தியாகத்தை புறக்கணித்து அவர்களின் இரத்தத்தை அவமதிப்பதாகத் தெரிகிறது.
ALSO READ: பிசிசிஐ சொன்னால்.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. இந்திய பயிற்சியாளர் சொன்ன முக்கிய விஷயம்!
இந்திய – பாகிஸ்தான் போட்டியின் ஒளிபரப்பு பொழுதுபோக்கு மற்றும் லாபத்திற்காக நாட்டின் உணர்வுகளைப் புறக்கணிப்பதாகும். இந்திய ஊடகங்களும் பொழுதுபோக்குத் துறையும் பாகிஸ்தானுடனோ அல்லது அந்நாட்டு கலைஞர்களுடனோ ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும். எந்தவொரு வகையான பொழுதுபோக்கு அல்லது வணிக ஆதாயத்தையும் விட நமது குடிமக்களின் தேசிய நலனும் கண்ணியமும் எப்போதும் முன்னுரிமை பெற வேண்டும். இந்த விஷயத்தில் சோனி டிவி எடுக்கும் எந்தவொரு நாட்டிற்கும்ச்நடவடிக்கையும் மக்களின் உணர்வுகளுக்கும் மரியாதை செலுத்தும் அடையாளமாக இருக்கும்” என்று ” என்று FWICE தலைவர் அசோக் ஜாய் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.