இந்தியா ஃபைனலுக்கு போகாது, காரணம் இது தான் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் கருத்தால் சர்ச்சை

T20 World Cup : டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி ஃபைனலுக்கு செல்லாது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா ஃபைனலுக்கு போகாது, காரணம் இது தான் - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் கருத்தால் சர்ச்சை

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

03 Mar 2026 20:35 PM

 IST

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்கொள்ளவிருக்கிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குரூப் சுற்றில் இந்திய அணியின் தொடக்க வீரர்களின் வரிசை விமர்சிக்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வலுவான அணியாக இங்கிலாந்தை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தான் வீரரின் கருத்தால் சர்ச்சை

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாது என பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சரியான ஃபார்மில் இல்லை. பேட்டிங் வரிசையும் அடிக்கடி சரிவுகளை சந்திக்கின்றன என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் மிக சிறப்பாக விளையாடியனார். அவருக்கு இன்னும் அதிக பாராட்டுகள் கிடைக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க :  IND vs ENG: அரையிறுதியில் ஒரே அணி, ஒரே ஸ்டேடியம்.. 39 ஆண்டுகால பழியை தீர்க்குமா இந்தியா?

மேலும் பேசிய அவர், இந்திய அணி முழுமையான கிரிக்கெட் விளையாடவில்லை. பும்ரா தவிர எந்த பந்துவீச்சாளரும் ஃபார்மில் இல்லை. இந்திய அணியின் ஃபீல்டிங்கும் மோசமாக இருந்தன. குறிப்பாக 3 முதல் 4 கேட்ச்சுகள் வரை தவறவிடப்பட்டன. பெரிய அணிகளுக்கு எதிராக இத்தகைய தவறுகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் . ஹர்திக் பாண்ட்யா பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. அவர் 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்தது கவலைக்குரிய விஷயம் என்றார்.

ஹெட்மயர் அவுட் சர்ச்சை

மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரன் ஹெட்மயர் அவுட் செய்யப்பட்ட தீர்ப்பு சர்ச்சைக்குரியது. ஹெட்மயர் அவுட் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் இன்னும் சில ஓவர்கள் விளையாடியிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் 220 முதல் 230 ரன்கள் வரை எடுத்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறியிருக்கும். பும்ரா வீசிய அந்த பந்து ஸ்னிக்கோமீட்டரில் ஸ்பைக் தெளிவாகக தெரிந்ததால் மூன்றாவது நடுவர் ஹெட்மயரின் விக்கெட்டை உறுதிப்படுத்தினார் என்றார்.

இதையும் படிக்க : இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? தடை போடுமா நியூசிலாந்து? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மார்ச் 5, 2026 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய போட்டியில் வென்றால் இந்திய அணி 6வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லும். இந்த நிலையில் இந்திய அணி வீரர்களன் ஃபார்ம் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ