Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCB: விற்பனையில் ஆர்சிபி.. வாங்க போட்டியிடும் அதானி குழுமம்.. விலை இவ்வளவா..?

RCB For Sale: ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை, மும்பைக்கு பிறகு இந்த அணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமூக ஊடகங்களில் கூட, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஆர்சிபி மற்ற அணிகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது.

RCB: விற்பனையில் ஆர்சிபி.. வாங்க போட்டியிடும் அதானி குழுமம்.. விலை இவ்வளவா..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Oct 2025 21:37 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் 2025ல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி விற்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 அக்டோபர் மாத தொடக்கத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவல்லா ஆர்சிபியை வாங்க ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. கிரிக்பஸ் அறிக்கையின்படி, தற்போது ஆர்சிபி அணியை வாங்க போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, ஆர்சிபி அணியின் முழு உரிமையை வாங்க தற்போது 6 ஒப்பந்தங்கள் நடந்து வருகின்றன. இந்த பட்டியலில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் பெயர்களில் ஜிண்டால் சவுத் வெஸ்ட் (JSW) குழும உரிமையாளர் பார்த் ஜிண்டால் மற்றும் அதானி குழுமமும் இடம் பெற்றுள்ளது.

ALSO READ: ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த கோலி.. ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா?

ஐபிஎல் 2026க்கு முன் விற்கப்படும் ஆர்சிபி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தற்போது பிரிட்டிஷ் நிறுவனமான டியாஜியோ பிஎல்சிக்கு சொந்தமானது. ஆனால் இப்போது இந்த நிறுவனம் ஆர்சிபி அணியிடம் இருந்து பிரிந்து செல்லத் தயாராக உள்ளனர். இதற்கிடையில், ஜேஎஸ்டபிள்யூ குழுமமும் டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளரான பார்த் ஜிண்டாலும் ஆர்சிபியை வாங்கத் தயாராக உள்ளனர். ஜிண்டால் குழுமம் தற்போது கிராந்தி மல்லிகார்ஜுன ராவ் (ஜிஎம்ஆர்) குழுமத்துடன் இணைந்து டெல்லி கேபிடல்ஸ் உரிமையை வைத்திருக்கிறது. இருப்பினும், ஜிண்டால் குழுமம் ஆர்சிபியின் உரிமையாளராக மாறினால், டிசி ஜிஎம்ஆர் குழுமத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்குமா அல்லது டெல்லி அணிக்கு புதிய உரிமையாளர் கண்டுபிடிக்குமா என்பது தெரியவில்லை.

போட்டியில் அதானி குழுமம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு போட்டியிடும் பட்டியலில் ஜிண்டால் குழுமம் மட்டுமல்ல, அதானி குழுமமும் உள்ளது. அதானி குழுமம் கடந்த 2021ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்க ஆர்வம் காட்டியது. அதேநேரத்தில், அதானி குழுமம் WPL (மகளிர் பிரீமியர் லீக்) தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியையும் சொந்தமாக வைத்துள்ளது. இப்போது, ​​RCB அணியை வாங்கிய பிறகு, அதானி குழுமம் IPL-லும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது.

ALSO READ: டெஸ்ட்-ம் டி20யும் சேர்ந்த கலவை.. கிரிக்கெட்டில் வருகிறது புது வடிவம்.. ஆர்வத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஆர்.சி.பி எவ்வளவு விலைக்கு விற்கப்படும்?

ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை, மும்பைக்கு பிறகு இந்த அணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமூக ஊடகங்களில் கூட, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஆர்சிபி மற்ற அணிகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது. இருப்பினும், ஆர்சிபியின் விற்பனைக்கு முன் உள்ள மிகப்பெரிய பிரச்சினை அதன் மதிப்பீடு ஆகும். ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் அதன் மதிப்பை சுமார் ரூ. 17,859 கோடி (178.59 பில்லியன் ரூபாய்) என மதிப்பிடுகிறது. இருப்பினும், இவ்வளவு தொகையை கொடுத்து எந்த நிறுவனம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.