Suryakumar Yadav: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? இதுதான் என் இலக்கு! சூர்யகுமார் யாதவ் பளீச்!

Indian Cricket Team: 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ், 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை முதல் 2026 டி20 உலகக் கோப்பை வரை ஒரு டி20 தொடரை கூட இந்திய அணி இழந்தது கிடையாது. ஒரு கேப்டனாக இந்திய அணியை வெற்றிகளைப் பதிவு செய்தார்.

Suryakumar Yadav: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? இதுதான் என் இலக்கு! சூர்யகுமார் யாதவ் பளீச்!

சூர்யகுமார் யாதவ்

Published: 

10 Mar 2026 16:46 PM

 IST

சூர்யகுமார் யாதவின் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2026 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. சூர்யகுமார் யாதவ் ஒரு கேப்டனாக வெற்றிகரமாக இருந்தபோதிலும், ஒரு வீரராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். இதையடுத்து, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக வதந்திகள் இருந்தபோதிலும், சூர்யகுமார் யாதவ் அதுகுறித்து தெளிவு படுத்தினார். டி20 உலகக் கோப்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்த போதிலும், மொத்தமாக 242 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: டி20 உலகக்கோப்பை வெற்றி.. இந்திய அணிக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.131 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ..

விரைவில் ஓய்வா?

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ், 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை முதல் 2026 டி20 உலகக் கோப்பை வரை ஒரு டி20 தொடரை கூட இந்திய அணி இழந்தது கிடையாது. ஒரு கேப்டனாக இந்திய அணியை வெற்றிகளைப் பதிவு செய்தார். இருப்பினும், டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் ரன் வறட்சியை எதிர்கொண்டார்.  உலகக் கோப்பை நெருங்கும்போது அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பி அடுத்தடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கிடையில், 35 வயதான சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற ஊகங்கள் போட்டி தொடங்கியதிலிருந்தே பரவலாக இருந்தன. இறுதிப் போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யா, தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ALSO READ: 2 ஆண்டுகளில் 6 ஐசிசி கோப்பை.. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

சூர்யகுமார் யாதவின் எதிர்கால திட்டம்:

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது ஓய்வு குறித்த கேள்விகளுக்கு நகைச்சுவையான பதிலளித்த அவர், “எனது அடுத்த இலக்கு இந்தியாவுக்காக 2028 டி20 உலகக் கோப்பையை வெல்வது, அதன் பிறகு எனது இறுதி இலக்கு 2028 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது. 2024ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு மிகவும் வெற்றிகரமாகவே இருந்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக 3 ஐசிசி கோப்பைகளை (2 டி20 உலகக் கோப்பை, ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி) வென்றோம். வருகின்ற காலமும் எங்களுக்கு சிறப்பானதாகவே இருக்கும் என நினைக்கிறோம்” என்று தெரிவித்தார். இதன்மூலம், சூர்யகுமார் யாதவ் வருகின்ற 2028ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..