India women vs Sri Lanka women: மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா பிளாக்பஸ்டர் வெற்றி.. இலங்கை வீழ்த்தி அசத்தல்!
Women's Cricket World Cup: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் வெற்றியில் தீப்தி சர்மாவின் ஆல்ரவுண்ட் செயல்திறன் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இலங்கை அணி பேட்டிங் செய்தபோது தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்திய மகளிர் அணி
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் (Women’s Cricket World Cup) முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை (India women vs Sri Lanka women) 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் போட்டி இதுவாகும், இதுவும் மழையால் தடைபட இருந்தது. இருப்பினும், போட்டி முழுமையாக நடந்து முடிந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் எடுத்தது. ஆனால் மழை காரணமாக, DLS விதிப்படி, இலங்கை மகளிர் அணிக்கு 47 ஓவர்களில் 271 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய இலங்கை அணி வெறும் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி அசத்தல்:
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்காக பிரதிகா ராவல் 37 ரன்கள், ஹர்லீன் தியோல் 48 ரன்கள் எடுத்து அரைசதத்தை தவறவிட்டார். தொடர்ந்து, ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 53 ரன்கள் எடுத்து அபாரமான அரைசதம் அடித்தார். அதேநேரத்தில், இந்த இன்னிங்ஸில் அமன்ஜோத் கவுர் மற்றும் சினே ராணா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்த அமோன்ஜித் கவுர் 56 பந்துகளில் 57 ரன்களும், ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்த சினே ராணா 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அசத்த, இது இந்திய அணி 269 ரன்கள் என்ற மகத்தான ஸ்கோரை எட்ட உதவியது.
ALSO READ: காயம் காரணமாக மீண்டும் வாய்ப்பு மிஸ்? ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம் பெறுவாரா ஹர்திக் பாண்ட்யா?
பந்துவீச்சிலும் கலக்கிய தீப்தி சர்மா:
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் தீப்தி சர்மாவின் ஆல்ரவுண்ட் செயல்திறன் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இலங்கை அணி பேட்டிங் செய்தபோது தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். அதாவது, இந்திய மகளிர் அணிக்காக 9 ஓவர்களில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கி 140 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது. இருப்பினும், நீலாக்ஷி டி சில்வா 35 ரன்கள் எடுத்து ஸ்னே ராணாவால் கிளீன் பவுல்டு ஆனார். அதன்பிறகு, குலசூரியா 17 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: வென்ற அணிக்கே ஆசியக் கோப்பை.. ஏசிசி கூட்டத்தில் பிசிசிஐ கடும் வாதம்..!
இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் இலங்கை மகளிர் அணிக்கு எதிராக குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தினர். இதில், அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், சினே ராணா மற்றும் ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேநேரத்தில், கிராந்தி கவுர், அமன்ஜோத் கவுர் மற்றும் பிரதிகா ராவல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.