Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா? மத்திய அமைச்சகம் விளக்கம்!

India vs Pakistan: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருதரப்பு போட்டிகளில் இந்திய அணிகள் பங்கேற்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பலதரப்பு போட்டியான ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் பங்கேற்பு தொடரும்.

Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? மத்திய அமைச்சகம் விளக்கம்!

இந்தியா - பாகிஸ்தான்

Published: 

22 Aug 2025 08:30 AM

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான மோதல் கிரிக்கெட் உலகத்தில் மிகப்பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது. 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்திய மக்கள் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்தவொரு போட்டியிலும் விளையாடக்கூடாது என சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். இருப்பினும், 2025 ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்பதை தடுக்க முடியாது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சகம் விளக்கம்:


இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ எங்கும் இருதரப்பு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டால், இந்திய வீரர்கள்/அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். பாகிஸ்தான் வீரர்கள்/அணிகள் இந்தியாவிற்கு வருகை தர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சர்வதேச மற்றும் பலதரப்பு விளையாட்டு நிகழ்வுகளைப் பொறுத்தவரை, சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் விதிகள் மற்றும் எங்கள் வீரர்களின் நலன்களை நாங்கள் கவனித்துக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.

ALSO READ: ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணி எது..? முதலிடத்தில் கெத்துக்காட்டும் இந்தியா!

இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒருபோதும் நடக்காதா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி இருதரப்பு தொடர் 2012 இல் நடைபெற்றது. 2008 ஆசிய கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் ஒருபோதும் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதில்லை. இந்திய அரசாங்கத்தின் புதிய கொள்கை, தற்போது எந்த விளையாட்டிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர் சாத்தியமில்லை.

ALSO READ: ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம்.. இத்தனை வெற்றி கண்டதா இந்திய அணி..?

2025 ஆசியக் கோப்பை:

2025 ஆசிய கோப்பை அட்டவணையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. ஆசிய கோப்பை வரலாற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 18 முறை மோதியுள்ளன, அதில் இந்தியா 10 முறையும், பாகிஸ்தான் 6 முறையும் வென்றது, அதே நேரத்தில் இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.