2026 மாசி மகம் எப்போது?.. மார்ச் 2 அல்லது மார்ச் 3?.. குழப்பங்களும்.. முழு விளக்கமும்!

மாசி மகம் 2026: மகம் நட்சத்திரம் திங்கட்கிழமை காலையிலேயே தொடங்கிவிடுவதால், அன்றைய தினமே மாசி மகம் கொண்டாடப்படுகிறது. கோவில்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள், புண்ணிய நதிகள் மற்றும் கடல் நீராடல், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தல், திருவண்ணாமலையில் சிவபெருமான் வல்லாள மகாராஜாவுக்குத் திதி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

2026 மாசி மகம் எப்போது?.. மார்ச் 2 அல்லது மார்ச் 3?.. குழப்பங்களும்.. முழு விளக்கமும்!

மாசி மகம் 2026

Updated On: 

28 Feb 2026 14:36 PM

 IST

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நாளே ‘மாசி மகம்’ என்று கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு மாசி மகம் திருவிழா, ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மாசி மகத்துடன் சந்திர கிரகணமும் இணைந்து வருவதால், வழிபாட்டு முறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறு நாட்களில் வருவதால், எப்போது வழிபட வேண்டும் என்ற குழப்பம் பலரிடையே உள்ளது. இதற்கான துல்லியமான நேரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: சனிப்பெயர்ச்சி 2026.. மீன ராசியினருக்கு அடிக்குது ஜாக்பாட்.. அளிக்கொடுக்க வருகிறார் சனி பகவான்..

மாசி மகத்தின் தத்துவம்:

இறைவன் பஞ்சபூதங்களிலும் நிறைந்திருக்கிறார். மாசி மகம் அன்று நீர்நிலைகளில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபடுவது (தீர்த்தவாரி) மிகவும் விசேஷமானது. புண்ணிய நதிகளில் நீராடுவது என்பது வெறும் உடல் அழுக்கை நீக்க மட்டுமல்ல, மனதின் அழுக்குகளையும் பாவங்களையும் போக்கிப் புண்ணியத்தைச் சேர்ப்பதற்கே ஆகும். உண்மையான தெய்வ பக்தியுடனும், சுத்தமான எண்ணங்களுடனும் நீராடுவதே உண்மையான பலனைத் தரும்.

2026 திதி மற்றும் நட்சத்திர நேரங்கள்:

மக நட்சத்திரம் தொடக்கம்: மார்ச் 2, 2026 (திங்கள்) காலை 08:17 மணி.

மக நட்சத்திரம் முடிவு: மார்ச் 3, 2026 (செவ்வாய்) காலை 08:07 மணி.

பௌர்ணமி திதி தொடக்கம்: மார்ச் 2, 2026 (திங்கள்) மாலை 06:29 மணி.

பௌர்ணமி திதி முடிவு: மார்ச் 3, 2026 (செவ்வாய்) மாலை 05:52 மணி.

எந்த நாளில் என்ன வழிபாடு?

நட்சத்திரம் மற்றும் திதியின் கால நேரத்தைக் கணக்கிட்டு, வழிபாடுகள் இரண்டு நாட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

மார்ச் 2, திங்கட்கிழமை (மாசி மகம்): மகம் நட்சத்திரம் திங்கட்கிழமை காலையிலேயே தொடங்கிவிடுவதால், அன்றைய தினமே மாசி மகம் கொண்டாடப்படுகிறது. கோவில்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள், புண்ணிய நதிகள் மற்றும் கடல் நீராடல், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தல், திருவண்ணாமலையில் சிவபெருமான் வல்லாள மகாராஜாவுக்குத் திதி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

மார்ச் 3, செவ்வாய்க்கிழமை (மாசி பௌர்ணமி): பௌர்ணமி திதி திங்கள் மாலை தொடங்கி செவ்வாய் மாலை வரை நீடிப்பதால், பௌர்ணமி சார்ந்த வழிபாடுகள் அன்றைய தினம் நடைபெறுகின்றன. பௌர்ணமி விரதம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கலாம். கேரளாவின் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா (மாசி பூரம்) அன்று நடைபெறுகிறது.

சந்திர கிரகணம்:

மார்ச் 3 அன்று முழு சந்திர கிரகணம் நிகழ்வதால், மாலை வேளையில் கோவில் நடை திறப்பு மற்றும் வழிபாடுகளில் மாற்றங்கள் இருக்கும். மதியம் 12:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை பல முக்கிய கோவில்களில் நடை சாத்தப்படும். திருக்கோஷ்டியூர் கோவிலில் மார்ச் 3 அன்று பகல் 01:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை நடை சாத்தப்பட்டு, இரவு 10:00 மணிக்குத் தெப்போற்சவம் நடைபெறும்.

இதையும் படிக்க: உங்கள் ஜாதகத்தில் சுக்கிர தோஷம்?.. அறிகுறிகளும்.. எளிய தீர்வுகளும்.. முழு விவரம்!!

கும்பகோணம் அல்லது பொதுவான தீர்த்தவாரி வழிபாடுகளைச் செய்ய விரும்பினால் மார்ச் 2 (திங்கள்) அன்று செல்வது சிறந்தது. திருக்கோஷ்டியூர் தெப்பம் அல்லது குறிப்பிட்ட கிரகண கால வழிபாடுகளை மேற்கொள்ள விரும்பினால் மார்ச் 3 (செவ்வாய்) அன்று திட்டமிடலாம்.

கிரிவலம் செல்வோர் கவனத்திற்கு:

திருவண்ணாமலை கிரிவலம் செல்வோருக்குப் பௌர்ணமி திதி தொடங்கும் நேரமான மார்ச் 2 (திங்கள்) மாலை 6:28 மணி முதல், மார்ச் 3 (செவ்வாய்) மாலை 5:52 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும்.

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..