Vastu Tips: எக்காரணம் கொண்டும் வீட்டின் முன் வளர்க்கக்கூடாத 5 செடிகள்!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் முன் சில தாவரங்களை வளர்ப்பது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். அரசமரம், முள்செடிகள், போன்சாய் செடி, உலர்ந்த செடிகள் மற்றும் புளியமரம் போன்றவை வீட்டின் முன் இருக்கக் கூடாது. இவை நிதிப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்
ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது மிக முக்கியமானது. அது நம்முடைய வாழ்க்கையில் ஏற்றத்திற்கும், இறக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. நிலம் சார்ந்த விஷயம் மட்டுமல்லாமல் பல நிலைகளிலும் வாஸ்து சாஸ்திரம் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் பலர் தங்கள் வீடுகளை அழகாக்க தங்கள் வீடுகளுக்கு முன்னால் பல்வேறு விதமான தாவரங்களை நட்டு வளர்கிறார்கள். ஆனால் சில தாவரங்கள் வீட்டை அழகுபடுத்துவது மட்டுமல்லாமல் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருவது உண்மை தான். அதே வேளையில், சில தாவரங்கள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும். இப்படியான நிலையில் வாஸ்து படி வீட்டின் முன் எந்த தாவரங்களை வைக்கக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம்.
அதன்படி வீட்டின் பிரதான கதவு வீட்டின் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதுகாக்கிறது. இது எதிர்மறை ஆற்றல் மற்றும் நேர்மறை ஆற்றல் இரண்டிற்கும் வாயில் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் பிரதான கதவு முன் சில செடிகளை நட்டால், அது வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவற்றில் மிக முக்கியமானது அரச மரம். அந்த மரம் வீட்டின் முன் இருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இது வீட்டில் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காது.
Also Read: பணப் பிரச்னைகளை போக்கும் ஏலக்காய் வழிபாடு.. செய்வது எப்படி?
அதேபோல், வீட்டின் முன் முள் செடிகளை ஒருபோதும் வளர்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது. பலர் வீட்டின் பிரதான நுழைவாயிலில் பல்வேறு ரோஜா போன்ற அழகாக இருக்கும் சில செடிகளை வளர்க்கிறார்கள். ஆனால் வீட்டின் முன் முள் செடிகள் இருப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களிடையே மோதல்களையும் அதிகரிக்கிறது.அதேபோல், வீட்டின் பிரதான நுழைவாயிலில் சில ஈர்ப்பை ஏற்படுத்தும் தாவரங்கள் அழகாகத் தெரிந்தாலும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, அவை வீட்டிற்குள் நிறைய எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகின்றன.
அவற்றில் ஒன்று போன்சாய் செடி. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அதை பிரதான நுழைவாயிலுக்கு எதிரே வைத்தால், அது வேலையில் பிரச்சனைகளையும் நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தும். மேலும், உலர்ந்த துளசி செடியையோ அல்லது வேறு எந்த உலர்ந்த செடியையோ வீட்டின் பிரதான வாசலுக்கு எதிரே வைக்கக்கூடாது. அவை வீட்டிற்குள் எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகின்றன. அதேபோல், வீட்டின் பிரதான வாசலில் புளிய மரம் வைத்திருப்பது நல்லதல்ல என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Also Read: வீட்டில் இந்த திசையில் புத்தர் சிலை இருந்தால் செல்வம் கொட்டும்!
சிலர் வீட்டின் பிரதான வாசலுக்கு எதிரே பருத்தி மரத்தை நடுவார்கள். ஆனால் அதை வீட்டிற்கு எதிரே வளர்ப்பது நல்லதல்ல. இது மிக மோசமான சம்பவங்களுக்கு வழிவகுக்கும் அல்லது தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
(ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)