Diwali 2025: தீபாவளி நாளில் துளசி செடியை வழிபாடு.. அதிர்ஷ்டம் கொட்டும்!
தீபாவளி பண்டிகை என்பது இந்துக்களின் முக்கிய கொண்டாட்டமாகும். இந்நாளில் அமாவாசை இருளை நீக்கி, வீடுகளில் விளக்கேற்றி, லட்சுமி மற்றும் விநாயகரை வழிபடுகிறோம். 2025 தீபாவளி அன்று, துளசி செடிக்கு சிறப்பு பூஜை செய்வது செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. மேலும் நிதி சிக்கல்களை நீக்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும் எனவும் சொல்லப்படுகிறது.

துளசி வழிபாடு
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில், தீபாவளி பண்டிகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அமாவாசை இருளை விளக்குகளின் ஒளியால் நீக்கும் தீபங்களின் பண்டிகை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதத்தில் அமாவாசை தினம் தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடும் செய்யப்படுகிறது. தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதாக நம்பப்படுகிறது. செல்வம், செழிப்பிலும் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் எப்போதும் குடும்பத்தினர் மீது இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தீபாவளி நாளில், லட்சுமி தேவியை மகிழ்விக்க சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. இவை மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. சாஸ்திர நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் துளசி சம்பந்தப்பட்ட சடங்குகளைச் செய்வது நிதி சிக்கல்களை நீக்கி வாழ்க்கையில் செழிப்பைத் தரும். தீபாவளி நாளில் துளசி செடியை எப்படி வழிபடுவது என சொல்லப்படுகிறது. அதனை பற்றி காணலாம்.
இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல்; மாட்டு சாணத்தில் அழகான சிலைகள்.. புதுவித முயற்சி!
2025 ஆம் ஆண்டு தீபாவளி நாட்காட்டியின்படி, அமாவாசை திதி அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை 03:44 மணிக்குத் தொடங்குகிறது. இந்த திதி அக்டோபர் 21 ஆம் தேதி அதிகாலை 05:54 மணிக்கு முடிவடைகிறது.
துளசியை எப்படி வழிபடுவது?
பொதுவாக வீட்டில் துளசி மாடம் அல்லது துளசி செடியின் அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பது வழக்கம். அப்படியாக தீபாவளி அன்று, துளசி செடியின் அருகில் பசு நெய்யால் செய்யப்பட்ட விளக்கை ஏற்றி, துளசி செடியைச் சுற்றி பிரதக்ஷிணை செய்யுங்கள். இந்த பரிகாரம் லட்சுமி தேவியின் அருளைப் பெற உதவுகிறது. நிதி சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது. பாதுகாப்பான வாழ்க்கையை வழங்குகிறது.
தீபாவளி நாளில் துளசி பூஜை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இன்று காலையில் குளித்த பிறகு, துளசி செடியை வணங்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்காக, துளசி செடியை மஞ்சள், குங்குமம், வளையல்கள், ரவிக்கை ஆகியவை வைத்து வணங்கி, பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை பிரசாதமாக படைக்க வேண்டும். வழிபாட்டுக்கு பிறகு இந்த பொருட்களை வீட்டில் அல்லது அருகிலுள்ள திருமணமான பெண்ணுக்கு பரிசாக வழங்க வேண்டும். இதைச் செய்வது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.
இதையும் படிங்க: தீபாவளி தினத்தன்று இப்படி விளக்கேற்றினால் மகிழ்ச்சி தழைக்கும்!
தீபாவளியன்று, சிறிது கங்கை நீர் அல்லது உங்கள் பகுதியில் உள்ள புனிதமாக வணங்கப்படும் நீர் நிலைகளில் கலந்த தண்ணீரை துளசி செடிக்கு அர்ப்பணிக்க வேண்டும். துளசி மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டும். தீபாவளியன்று இந்த வழியில் செய்யப்படும் பூஜை பரிகாரங்கள் நல்ல பலன்களைத் தரும். லட்சுமி தேவியின் ஆசியுடன், தடைபட்ட பணிகள் கூட விரைவில் முடிவடையும் என நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)