Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏக மண்டல பூஜை செய்தால் நினைத்து நடக்கும் – எப்படி செய்ய வேண்டும்?

Vinayagar Worship : நம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் ஏதாவது தடைகள் வந்து நம் முயற்சியை கைவிட வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏக மண்டல பூஜை நம் நினைத்ததை நிறைவேற்ற உதவும்.

ஏக மண்டல பூஜை செய்தால் நினைத்து நடக்கும்  – எப்படி செய்ய வேண்டும்?
விநாயகர் பூஜை
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Nov 2025 22:33 PM IST

நம்முடைய வாழ்க்கையில்  நாம் தீவிரமாக நினைத்து சாதிக்க வேண்டும் என்றால், அதற்கான மன உறுதி, பொறுமை, மற்றும் நம்பிக்கையுடன் வழிபாடு ஆகியவை முக்கியம். அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையுடன் செய்யப்படும் ஒரு சிறப்பு வழிபாடு தான் ஏக மண்டல பூஜை. நாம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைத்திருப்போம். ஆனால் நாம் முயற்சிக்கும்போது எதாவது ஒரு தடைகள் வந்து சேரும். இதனால் சோர்ந்து போய் முயற்சிப்பதையே கைவிடுவோம். இது போன்ற நேரங்களில் நமக்கு கைகொடுப்பது தான் ஏக மண்டல பூஜை. இது நம் நினைத்தது நடைபெற உதவும் என ஆன்மிக குருக்கள் தெரிவிக்கின்றனர். இதனை எப்படி செய்வது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஏக மண்டல பூஜை என்பது என்ன?

மண்டலம் என்பது 48 நாட்கள் எனப் பொருள். இந்த 48 நாட்கள் ஒரு முழு சுழற்சியாகக் கருதப்படுகிறது. அதாவது கடவுளை, ஒரே எண்ணத்தைக் கொண்டு, 48 நாட்கள் தொடர்ந்து வழிபடுவது ஏக மண்டல பூஜை எனப்படுகிறது.  இந்து நம்பிக்கையின்படி, ஒரு மண்டலத்திற்கு ஒரே குறிக்கோளுடன் தினமும் தவறாமல் பூஜை செய்தால், அந்த வேண்டுதல் நிறைவேறும் என கூறப்படுகிறது. ஏக மண்டலம் என்பது ஒரு முழு மண்டல காலம். அதாவது தொடர்ச்சியாக 48 நாட்கள் ஒரு செயலை நினைக்கும்போது அது நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்க : சிவன் பார்வை உண்டு.. கார்த்திகை மாதத்தின் அகல் விளக்கு தானம் தெரியுமா?

இந்த 48 நாட்கள் விநாயகர் வழிபாடு செய்யப்படும் போது, நமது மனதில் இருக்கும் தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நடைபெறும் என்று பண்டைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது உடல், மனம், ஆன்மா என மூன்றையும் ஒரே எண்ண ஓட்டத்தில் கொண்டு செல்லும் ஆன்மிகப் பயிற்சியாக பார்க்கப்படுகிறது.

எப்படி செய்ய வேண்டும்?

இதற்காக ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுங்கள். பெரிய காரியம் அல்லது வேண்டுதல் நினைத்து, அதற்கான நல்ல நாளில் பூஜையைத் தொடங்குங்கள். இதற்கான நல்ல நாளாக சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, அல்லது திங்கட்கிழமை காலை என இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பூஜையைத் தொடங்க வேண்டும். தினமும் காலையில் குளித்த பிறகு, விநாயகரை பூஜை செய்து மனதில் நம் எண்ணங்களை நினைத்துக்கொள்ள வேண்டும்.  கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற  அவசியம் இல்லை. வீட்டில் இருந்த படியே விநாயகர் சிலைக்கோ, அல்லது படத்துக்கோ பூஜை செய்யலாம்.

தினமும் குறைந்தது 108 முறை ஓம் கம் கணபதயே நமஹ எனும் மந்திரத்தை சொல்லுங்கள். இது மன அமைதியையும் நம்பிக்கையையும் அளிக்கும்.  இந்த பூஜையை ஒரு நாள் விடாது செய்ய வேண்டும். பூஜை ஒரு நாள் கூட தவறினால், அதனை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்பதே மரபு.

இதையும் படிக்க : Rahu Dosham : ராகு தரும் தடைகள்.. இந்த ராசிகள் கவனமா இருக்கணும்!

பூஜை செய்யும் இந்த காலத்தில் மது அருந்துதல் புகைப்பிடித்தல், கோபம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.  பூஜை செய்யும் நாட்களில் தினமும் யாருக்காவது குறைந்தபட்சம் ஒரு நன்மை செய்யவும்.  உதாரணமாக யாராவது பசி என்று கேட்டால் உணவு வாங்கி கொடுக்கலாம். வீட்டின் வாசலில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கலாம். மேலும் யாரிடமாவது பேசும்போது நல்ல வார்த்தைகளாக பேசலாம்.  எதையும் மன உறுதியுடன், நம்பிக்கையுடன், 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால், நாம் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.