தைப்பூசம் 2026.. செல்வம் பெருக வீட்டில் இந்த 3 பொருட்கள் கட்டாயம் வேண்டும்..

Thaipusam 2026; தைப்பூசத் திருநாள் என்பது, பார்வதி தேவி தன் ஞானத்தின் வடிவமாக வேலாயுதத்தை முருகப்பெருமானுக்கு வழங்கிய நாள் என்றும், சூரபத்மனை வதம் செய்ய முருகன் புறப்பட்ட புனித நாளாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு தெய்வீக ஞானமும் செல்வ வளமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

தைப்பூசம் 2026.. செல்வம் பெருக வீட்டில் இந்த 3 பொருட்கள் கட்டாயம் வேண்டும்..

முருகப்பெருமான் (AI)

Published: 

26 Jan 2026 22:28 PM

 IST

2026 பிப்ரவரி 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தமிழில் தை மாதம் 18ம் தேதி, முருகப் பெருமானுக்கே உரிய தைப்பூசத் திருநாள் வருகிறது. இத்தகைய புனித நாளில், காலையில் செய்யப்படும் முதல் சுபச் செலவாக இந்த மூன்று பொருட்களை வாங்கி வந்தால், நம் வீட்டில் முருகப்பெருமானின் அருள் கிடைத்து, சகல விதமான சௌபாக்கியங்களும் நிறைவாக ஏற்படும் என்று ஆன்மிக நம்பிக்கை கூறுகிறது. இந்த வருட தைப்பூசம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது. காரணம், தை மாதத்தில் வரும் பூச நக்ஷத்திரமும் பௌர்ணமியும் ஒரே நாளில் இணைவதுதான் தைப்பூசம். மேலும், இந்த ஆண்டு அது ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், பூமிக்கு அதிகமான தெய்வீக ஆற்றல்கள் கிடைக்கும் நாளாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க: தைப்பூசத்தில் அப்படி என்ன சிறப்பு?.. எதனால் கொண்டாடுகிறோம்?..

தைப்பூசத் திருநாள் என்பது, பார்வதி தேவி தன் ஞானத்தின் வடிவமாக வேலாயுதத்தை முருகப்பெருமானுக்கு வழங்கிய நாள் என்றும், சூரபத்மனை வதம் செய்ய முருகன் புறப்பட்ட புனித நாளாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு தெய்வீக ஞானமும் செல்வ வளமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த தைப்பூசத் திருநாள், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், வெளிநாட்டு பயணம், நிலம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல் போன்ற அனைத்து நல்ல காரியங்களுக்கும் மிக உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இயல்பாகவே செல்வந்த யோகத்தை வழங்கும் தினமாகவும் தைப்பூசம் விளங்குகிறது.

அந்த வகையில், தைப்பூசத் திருநாளன்று வீட்டில் செல்வம் பெருக கட்டாயம் வாங்க வேண்டிய மூன்று பொருட்கள் இவை:

கல்லுப்பு:

தைப்பூசத் திருநாளன்று அதிகாலையில் நீராடி, இறைவழிபாடு செய்த பிறகு, வீட்டில் வாங்கி வர வேண்டிய முதல் பொருள் கல்லுப்பு. கல்லுப்பு என்பது தெய்வீக ஆற்றல்கள் நிறைந்ததாகவும், மகாலட்சுமி தேவியின் அம்சம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. இந்த கல்லுப்பை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்த பிறகு சமையல் அறையில் பயன்படுத்தினால், வீட்டில் செல்வ வளம் குறையாமல் நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

பச்சரிசி:

இரண்டாவது முக்கிய பொருள் பச்சரிசி. செல்வ வளத்துடன் சேர்ந்து, தீராத உணவு வளமும் வாழ்க்கையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பச்சரிசியில் அன்னபூரணி தேவியின் வாசம் இருப்பதாக நம்பப்படுகிறது. தைப்பூச நாளன்று ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி கூட வாங்கி, பூஜை செய்து சமையலில் பயன்படுத்தினாலே, உணவு வளமும் செழிப்பும் பெருகும்.

எலுமிச்சம் பழம்:

மூன்றாவது முக்கிய பொருள் எலுமிச்சம் பழம். ஞாயிற்றுக்கிழமைகளுக்கு உகந்த பொருளாக எலுமிச்சம் பழம் கருதப்படுகிறது. தைப்பூசத் திருநாளன்று ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி, முருகப்பெருமானின் வேலில் வைத்து வழிபடலாம். வேல் இல்லாதவர்கள், எலுமிச்சத்தை இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் குங்குமம் மற்றொன்றில் மஞ்சள் தடவி, வீட்டு வாசலில் வைத்தால், கண் திருஷ்டியும் தீய சக்திகளும் அண்டாது என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: தைப்பூசம் 2026: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? எப்போது விரதம் தொடங்க வேண்டும்? முழு விவரம்!!

முடிவாக, இந்த தைப்பூசத் திருநாளில் இந்த மூன்று பொருட்களையும் தவறாமல் வாங்கி, இறைவனை மனப்பூர்வமாக வழிபட்டால், வீட்டில் குறைவில்லாத செல்வ வளமும் நிம்மதியும் தொடர்ந்து நிலைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?