தைப்பொங்கல் 2026: பொங்கல் வைக்க சிறந்த நேரம்.. வழிபடும் முறை..

மஞ்சள் பிள்ளையார் வைப்பது, சமையலறை அடுப்பு அருகில் அல்லது வாசலில் மஞ்சளால் சிறு பிள்ளையார் வடிவம் செய்து வைப்பது மிகவும் முக்கியம். சிறு பொட்டு வைத்து பூவும் வைத்து அர்ச்சனை செய்யலாம். பொங்கலில், வெண்பொங்கல், சக்கரை பொங்கல் இரண்டும் செய்தால் மிகவும் நன்றாகும்.

தைப்பொங்கல் 2026: பொங்கல் வைக்க சிறந்த நேரம்.. வழிபடும் முறை..

மாதிரிப் புகைப்படம் (AI)

Updated On: 

10 Jan 2026 15:25 PM

 IST

2026 ஜனவரி 15 ஆம் தேதி தை மாதத்தின் முதல் நாள், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை காரணமாக, தமிழ் மாதங்களிலேயே தை மாதத்திற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். மார்கழி முடியும்போது குளிரும், துன்பங்களும் நீங்கிச் செல்லும்; தை மாதம் புதுப்பிறப்பு, வளம், நம்பிக்கை தரும் காலம் என கருதப்படுகிறது.

மேலும் படிக்க: தை அமாவாசை 2026: யார் என்ன செய்ய வேண்டும்? விரத முறை.. முழு விவரம்!!

பொங்கலின் ஆன்மீக முக்கியம்:

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாள். உழவர், வயல், மாடு, மண் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் திருநாள். உணவைப் பெற வழிவகுக்கும் சக்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும். பொங்கும் பானை போல வீடு செல்வம், நலம், வளம் பொங்கி வழியட்டும் எனப் பிரார்த்திக்கும் நாள்

பொங்கல் அட்டவணை (2026)

ஜனவரி 14 – மார்கழி 30 – போகி – பழையதை அகற்றி புதியதை வரவேற்கும் நாள்
ஜனவரி 15 – தை 1 – தை பொங்கல் முக்கிய திருநாள்
ஜனவரி 16 – தை 2 – மாட்டுப் பொங்கல்
ஜனவரி 17 – தை 3 – காணும் பொங்கல்

பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம்:

இந்த ஆண்டு தைப் பொங்கல் வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் தவிர்க்க வேண்டிய நேரங்கள் – எமகண்டம்: காலை 6.00 – 7.30, ராகுக்காலம்: பிற்பகல் 1.30 – 3.00, மிக உகந்த நேரம் (சூரிய வழிபாட்டிற்குப் பொருத்தமானது) காலை 10.30 – 11.30 சிறந்த நேரமாகும். பெரும்பாலானோர் இந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். “வாழ்க வளமுடன்” என்று சொல்லி பொங்கும் பானை பார்த்து வேண்டுவது நன்மையளிக்கும். காலை நேரத்தில் முடியாதவர்கள் மதியம் 1.00 மணி வரை செய்வது சிறந்தது. மாலை 6 மணிக்குப் பிறகும் வழிபாடு செய்யலாம், ஆனால் சூரியன் இருக்கும் நேரம் மிகவும் சிறப்பானது.

பொங்கல் எங்கு வைப்பது?

ஒவ்வொருவரும் தங்கள் மரபு படி செய்யலாம், வீட்டின் சமையலறையில் அடுப்பில் வீட்டின் வாசலில், தோரணம், கரும்பு வைத்து வெளியில் பாரம்பரிய முறையில் செங்கல் அடுப்பு போட்டு என எங்கு வைத்தாலும் சுத்தமாக, புனிதமாக வைத்தால் போதும்.

அன்றைய வழிபாட்டு முறை:

மஞ்சள் பிள்ளையார் வைப்பது, சமையலறை அடுப்பு அருகில் அல்லது வாசலில் மஞ்சளால் சிறு பிள்ளையார் வடிவம் செய்து வைப்பது மிகவும் முக்கியம். சிறு பொட்டு வைத்து பூவும் வைத்து அர்ச்சனை செய்யலாம். பொங்கலில், வெண்பொங்கல், சக்கரை பொங்கல் இரண்டும் செய்தால் மிகவும் நன்றாகும். சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அடையாளமாக பூஜையறையில் புதிய காய்கறிகளை வைக்க வேண்டும்.

Also Read : 2026 ஜனவரி மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு உருவாகும் ராஜயோகம்.. அடிக்குது அதிர்ஷ்டம்..

பரங்கிக்காய் (மிக முக்கியம்) உள்ளூரில் கிடைக்கும் வேறு காய்கறிகள் (சுரைக்காய், பச்சை பயறு, கத்தரிக்காய் முதலியவை) பொங்கிய பானையை அசையாமல் அடுப்பிலே இருந்தாலும் பிரசாதம் சொல்லலாம். பொங்கல் கொஞ்சம் வாழை இலையில் வைத்து சூரிய பகவானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், காலை வழிபாடு முடித்து, மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று தீபாராதனை காணலாம். இது மிக நற்சகுனம்

அன்னதானம் செய்யுங்கள்:

வீட்டில் தயாரித்த பொங்கலை சாலையில் உள்ள தேவையுள்ளவர்களுக்கு, தொழிலாளர்களுக்கு பசி உள்ள எவருக்கும் கொடுத்தால் அதிக புண்ணியம் ஆகும்.

கிரீன்லாந்தை குறிவைக்கும் டிரம்ப்.. என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டின் சந்திர கிரகணம் எப்போது? இதன் சிறப்புகள் என்ன?
32 விமானங்கள்... 300 விலையுர்ந்த கார்கள்... 52 தங்கப்படகுகள் - உலகின் பணக்கார மன்னர்
சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?