Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lord Shiva: சிவனின் ஆசி கிடைக்கணுமா? – 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய விஷயம்!

சாஸ்திரத்தைப் பொறுத்தவரை திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் சிவ பூஜையில் பங்கேற்று தங்கள் ராசிக்கேற்ப பொருட்களை அர்ப்பணிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. வில்வ இலை, பால், இனிப்புகள், சங்குகள் போன்றவை அர்ப்பண பொருட்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Lord Shiva: சிவனின் ஆசி கிடைக்கணுமா? – 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய விஷயம்!
சிவபெருமான்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Jul 2025 12:18 PM

பொதுவாக இந்து மதத்தில் வாரத்தின் 7 நாட்களும் விசேஷமானவையாக கருதப்படுகிறது. காரணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்ப்பணிகப்பட்டுள்ளது. அந்த வகையில் திங்கட்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக உள்ளது. ஏனெனில் இந்த நாள் கடவுளின் தலைவனாக அறியப்படும் சிவபெருமானுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் நாம் சிவபெருமானை எந்த ரூபத்தில் வழிபட்டாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தொல்லை கொடுக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் வீட்டில் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும் என்றும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் சிவபெருமானை வழிபாடு அவரின் ஆசிகளைப் பெற வேண்டுமென  விரும்பினால், திங்கட்கிழமைதோறும் கண்டிப்பாக சிவனை வழிபடுவது மட்டுமல்லாமல், உங்கள் ராசிக்கு ஏற்ப சில  பொருட்களையும் அபிஷேகத்திற்கு வழங்க வேண்டும். அதனைப் பற்றி நாம் காணலாம்.

திங்கட்கிழமை  சிவ பூஜைக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் நிலையில், இந்த நாளில் சிவனை வழிபடுவது அனைத்து சகல துன்பங்களையும் நீக்குகிறது. மேலும், திங்கட்கிழமை தினம், ஒன்பது கிரகங்களில் ஒன்றான சிவனுடன் சேர்ந்து, சந்திரனும் வழிபடப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்நாளில் விரதம் இருப்பதும் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சிவபெருமானின் அருளைப் பெற  விதிகளின்படி பூஜை செய்து, பின்னர்  உங்கள் ராசிக்கு ஏற்ப சில பொருட்களை வழங்கி இறுதியாக, ‘லிங்காஷ்டகம் ஸ்தோத்திரம்’ சொல்லுங்கள்.

Also Read: திருச்செந்தூர் முருகனை வழிபடும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள்!

சிவனை வழிபடும் முறை 

நீங்க சிவ பூஜையைத் தொடங்குவதற்கு முன், அவரை ஒருமுறை கண்களை மூடி தியானிக்க வேண்டும். முதலில், சிவலிங்கத்திற்கு நீர் அர்ப்பணிக்கவும். பின்னர் பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் செய்யும்போது ‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர் சிவலிங்கத்தின் மீது திருநீறு பூசவும். அதனுடன் வில்வ இலைகள், தாதுரா மலர் போன்ற பூக்களை படைக்கலாம். இதனையடுத்து தூபம் மற்றும் விளக்கை ஏற்றி வழிபாடு செய்யவும்.

Also Read:தாமிரபரணி நதிக்கரையில் அருள்பாலிக்கும் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?

12 ராசிக்காரர்களும் வழங்க வேண்டிய பொருட்கள்

  • மேஷம்: இந்த ராசிக்காரர்கள்  சிவபெருமானுக்கு வில்வ இலைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இந்த நாளில் சிவபெருமானுக்கு இனிப்பு கலந்த பால் படைக்க வேண்டும்.
  • மிதுனம்: மிதுன ராசியில் பிறந்த ஒருவர் சிவபெருமானுக்கு ஏதேனும் இனிப்புகளை படைக்க வேண்டும்.
  • கடகம்: கடக ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு சங்குகளை அர்ப்பணிக்க வேண்டும்.
  • சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • கன்னி: கன்னி ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை நைவேத்யம் செய்ய வேண்டும்.
  • துலாம்: இந்த ராசிக்காரர்கள் அவருக்கு தீப, தூபம் காட்ட வேண்டும்.
  • விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்தம் படைக்க வேண்டும்.
  • தனுசு: இந்த ராசியினர்  சந்தனத்தை காணிக்கையாக வழங்க வேண்டும்.
  • மகரம்: மகர ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு தேங்காய் மற்றும் கலசத்தை காணிக்கையாக கொடுக்க வேண்டும்.
  • கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு எள் லட்டுகளை நைவேத்யம் செய்ய வேண்டும்.
  • மீனம்: மீன ராசியில் பிறந்த ஒருவர் சிவபெருமானுக்கு மஞ்சள் நிறத்திலான பூக்களை சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

(இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)