Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? – ஆன்மிக வழிகள் இதோ!

சனி ஜெயந்தி 2025 மே 27 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானுக்கு பிரார்த்தனை செய்தல், எண்ணெய் தானம் செய்தல், கருப்பு எள், உளுந்து போன்றவற்றை தானம் செய்தல் போன்ற நற்செயல்கள் செய்யலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சனி பகவான் மந்திரங்களை ஓதுவதும் புண்ணியமானதாக பார்க்கப்படுகிறது.

சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? – ஆன்மிக வழிகள் இதோ!
சனி பகவான்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 May 2025 13:01 PM

இந்து மதத்தில் சனி பகவான் கொடுக்கவும் செய்வார், கெடுக்கவும் செய்வார் என்ற கருத்து உள்ளது. நீதியின் கடவுளாக அறியப்படும் அவர் நியாயத்தின் பக்கம் தான் எப்போதும் இருப்பார். மேலும் அதனடிப்படையில் கர்ம பலன்களை அள்ளித் தருபவராகவும் வணங்கப்படுகிறார். இப்படியான நிலையில் சனி பகவான் பிறந்த தினமாக வைகாசி மாத அமாவாசை நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே சனி பகவான் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார் என சொல்லப்படுகிறது. அதேசமயம் சனி பகவானின் பார்வைப் பட்ட ஒருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்வார் என நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் யாராவது சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து விடுபட விரும்பினால் அதற்கு சனி ஜெயந்தி சிறந்த நாளாகும். இந்த நாளில் நாம் என்ன செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு சனி ஜெயந்தி எப்போது?

வேத நாட்காட்டியின்படி, வைகாசி மாதத்தின் அமாவாசை மே 26 ஆம் தேதி மதியம் 11.31 மணிக்குத் தொடங்குகிறது. இந்த திதி மே 27 அன்று காலை 9:09 மணிக்கு முடிவடைகிறது. இத்தகைய சூழ்நிலையில், சனி பகவானின் பிறந்தநாள் மே 27 அன்று கொண்டாடப்படுகிறது.இந்த புனிதமான நாளில் சனி பகவானுக்குரிய கீர்த்தனைகளுடன், ஹனுமான் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்வது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

இந்த நாளில் என்ன செய்யலாம்?

ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய் அல்லது எள் எண்ணெயை எடுத்து கொள்ள வேண்டும். அதில் உங்கள் பிரச்னைகள் தீர வேண்டும் என மனதார வேண்டி அந்த எண்ணெயை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சனி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அதேசமயம் சனி ஜெயந்தி நாளில் சனி பகவான் தொடர்பான பொருட்களை தானம் செய்வதும் மிகவும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த நாளில் கருப்பு எள், உளுந்து, எண்ணெய், காலணிகள் போன்றவற்றை இயலாதவர்களுக்கு தானமாக வழங்கலாம்.

இதெல்லாம் செய்ய வேண்டாம்

சனிபகவான் கர்ம பலன்களைத் தருபவர் என்பதால் யார் தவறுகள் செய்திருந்தாலும் அவர்கள் மீது கோபப்படுவார் என்று கூறப்படுகிறது. இப்படியான நிலையில் வயதானவர்களை அவமதிப்பவர்கள், பெண்களை அவமரியாதை செய்பவர்கள், மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் அல்லது துன்புறுத்துபவர்கள் மீது சனி பகவான் தனது தாக்கத்தை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான  தாக்கத்தைக் காட்டுவார் என சொல்லப்படுகிறது, இதனால் அப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் சனி பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறமாட்டார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.

மேலும் இந்த சனி ஜெயந்தி நாளில் ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரும் சஹ ஷனைச்சராய நம, ஓம் காகத்வஜாய வித்வஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மண்ட பிரச்சோதயாத், ஓம் ஷம் ஷனைச்சராய நம, நீலாஞ்ஜந ஸமாபாசம் ரவிபுத்ரம் யமக்ரஜம் ஆகிய மந்திரத்தை உச்சரித்தால் மங்களம் உண்டாகும் என சொல்லப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லை. அதனால் இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)