தைப்பூச திருவிழா…பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!
Palani Murugan Temple Thaipusam: தைப்பூசத்தையொட்டி, பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் 3 நாள்களுக்கு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், தரிசனத்துக்காக அதிக நேரம் காத்திருப்பதை குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து
தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்காக ஏராளமான பொதுமக்கள் முருகன் கோவிலுக்காக வருகை தருவார்கள். அதன்படி, முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச நாளில் காலை முதல் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். மேலும், தை மாதம் தைப்பூசம் திருநாள் வருவதால் ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து நடை பயணமாக பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் வீற்றிருக்கும் சன்னிதானங்களுக்கு பக்தர்கள் செல்வது வழக்கமாகும்.
பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், பங்கேற்கும் பொது மக்களுக்காக கட்டண தரிசன முறை 3 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 31- ஆம் தேதி ( சனிக்கிழமை) பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை), பிப்ரவரி 2-ம் தேதி ( திங்கள்கிழமை) ஆகிய 3 நாட்கள் கட்டணம் தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மகர விளக்கு பூஜை நிறைவு…சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு…மீண்டும் பிப்.12-இல் நடை திறப்பு!
பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில்…
இந்தக் கோவிலில் கட்டண தரிசன முறை மற்றும் இலவச தரிசன முறை என இரண்டு வகை உள்ளது. இதன் வழியாக பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தைப்பூச திருநாளையொட்டி, அதிகளவு பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் மேற்கண்ட 3 நாட்கள் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு
அதன்படி, தை மாதம் ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து முருகன் கோவிலுக்கு சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். இந்த விழாவுக்காக தமிழகத்தில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு வரும் பொது மக்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க: தைப்பூசத்தில் அப்படி என்ன சிறப்பு?.. எதனால் கொண்டாடுகிறோம்?..