Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026ஆம் ஆண்டிற்கான எண் கணித கணிப்புகள்: உங்களுக்கு என்ன பலன்?

2026 Numerology Predictions: 2026ம் ஆண்டில் உங்கள் தனிப்பட்ட ஆண்டாக  (Personal Year – PY) எப்படி இருக்கும் என்பதை எப்படி கணக்கிடுவது? பிறந்த தேதி + பிறந்த மாதம் + 1 (2026) இரட்டை இலக்கங்களை ஒற்றை இலக்கமாக குறைக்க வேண்டும் (11, 22 மட்டும் அப்படியே வைக்க வேண்டும்).

2026ஆம் ஆண்டிற்கான எண் கணித கணிப்புகள்: உங்களுக்கு என்ன பலன்?
மாதிரிப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Dec 2025 16:27 PM IST

2026 என்பது ஒரு உலகளாவிய எண் 1 ஆண்டு (2+0+2+6 = 10 → 1). எண் கணிதத்தில் 1 முதல் 9 வரை உலகளாவிய ஆண்டுகள் அமைகின்றன. எண் 1 என்பது சூரியனின் ஆண்டு – சக்தி, தொடக்கம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் அடையாளம். இந்த ஆண்டில் உலகளவில் புதிய சிந்தனைகள், அரசியல் மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் காணப்படும். நாடுகள் பொறுப்புடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும். பொருளாதாரம், சந்தைகள் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கலாம். இயற்கையை பாதுகாப்பது மிகச் முக்கியம். எரிமலை வெடிப்புகள், தீ விபத்துகள், புயல்கள் போன்றவை நிகழ வாய்ப்புள்ளது. தனிப்பட்ட நிலையில், நீங்கள் நீண்ட காலமாக நினைத்த விஷயங்களைத் தொடங்க இது சிறந்த ஆண்டு. அகந்தை, கோபம் போன்றவற்றைத் தவிர்த்து இலக்கில் கவனம் செலுத்துங்கள். ஆன்மிக விழிப்புணர்வு பலருக்கும் ஏற்படும். சக்தி மிகுந்த ஆண்டு இது.

Also Read : சிவன் அருள் தேடி வரும்.. வீட்டில் வெள்ளி சிவலிங்கம் வழிபாடு செய்யும் முறை!

2026ம் ஆண்டில் உங்கள் தனிப்பட்ட ஆண்டாக  (Personal Year – PY) எப்படி இருக்கும் என்பதை எப்படி கணக்கிடுவது?

பிறந்த தேதி + பிறந்த மாதம் + 1 (2026) இரட்டை இலக்கங்களை ஒற்றை இலக்கமாக குறைக்க வேண்டும் (11, 22 மட்டும் அப்படியே வைக்க வேண்டும்).

உதாரணம்:

மே 2 → 2 + 5 + 1 (2008) = 8 → PY 8

PY 1 – புதிய தொடக்கம்:

புதிய இலக்குகள், திட்டங்கள், வாழ்க்கை மாற்றங்கள். தைரியமாக முன்னேறுங்கள். விதைகளை இப்போது விதையுங்கள். தலைமையாற்றுங்கள்.

PY 2 – உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு

உறவுகள் முக்கியம். பொறுமை, சமநிலை தேவை. உள்ளுணர்வு அதிகரிக்கும். திருமணம் அல்லது புதிய உறவுகள் ஏற்பட சாத்தியம்.

PY 11 – படைப்பாற்றல்

PY 2 போலவே ஆனால் அதிக ஆன்மிக சக்தியுடன், புதிய கனவுகளுடன், புதிய தத்துவங்களுடன் படைப்பாற்றல் உருவாகும்.  உணர்ச்சிப் பூர்வமான மாற்றங்கள் ஏற்படும்.

PY 3 – சுய வெளிப்பாடு

படைப்பாற்றல், பயணம், மகிழ்ச்சி ஓங்கும். எழுதுதல், நடிப்பு, சமூக ஊடகங்கள் மூலம் முன்னேற்றம். உங்களை வெளிப்படுத்துங்கள்.

PY 4 – உழைப்பு, கட்டமைப்பு

கடின உழைப்பு வெற்றியைத் தரும். திட்டமிடல் முக்கியம். வீடு அல்லது அலுவலகம் வாங்க நல்ல ஆண்டு.

PY 22 – பெரும் சாதனைகள்

பெரிய கனவுகள், பெரிய சாதனைகள். உலகளாவிய வாய்ப்புகள் உண்டு. சிந்தித்து செயல்படுங்கள்.

PY 5 – மாற்றமும், சுதந்திரமும்

புதிய வேலை, பயணம், மாற்றங்கள். வசதிக் கோட்டை விட்டு வெளியே வாருங்கள். தைரியமான முடிவுகள்.

PY 6 – குடும்பம் மற்றும் சமநிலை

திருமணம், குழந்தைகள், குடும்ப நலன். அழகு, அன்பு, பொறுப்புகள். ஒத்துழைப்பு வெற்றியைத் தரும்.

PY 7 – சிந்தனை மற்றும் ஆன்மிகம்

தனிமை, ஆய்வு, இயற்கை மீது விருப்பம் அதிகரிக்கும். புத்தகங்கள், மலைகள் அழைக்கும். வாழ்க்கை நோக்கத்தை கண்டறியுங்கள்.

PY 8 – சாதனை மற்றும் செல்வம்

பணம், அதிகாரம், வளங்கள். தலைமைத்துவம். கடின உழைப்பின் பலன் கிடைக்கும்.

PY 9 – நிறைவு, விடுதலை

பழையதை விடுங்கள். முடிவுகள், நிறைவு தரும். ஆன்மிக ஞானம் ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் தரும்.