Navratri 2025: நவராத்திரி 3ஆம் நாள்.. துர்க்கை வழிபாட்டு வழிமுறைகள் இதோ!
Navratri 2025 3rd Day: நவராத்திரியின் மூன்றாம் நாளில் வழிபடப்படும் துர்கா தேவியின் மூன்றாவது அவதாரமான சந்திரகாண்டா அன்னையை வழிபடுவதன் முக்கியத்துவம் பற்றி அறிவோம். அமைதி, தைரியம், நல்வாழ்வு ஆகியவற்றின் அடையாளமாக திகழும் சந்திரகாண்டா நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றை வழங்குவதாக நம்பப்படுகிறது.

நவராத்திரி
நவராத்திரி பண்டிகை என்பது இந்தியாவின் பண்டிகை கால தொடக்கமாகும். புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு மறுநாள் இந்த விழாக்காலம் தொடங்கும். 2025 ஆம் ஆண்டு இப்பண்டிகை செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்படியான நிலையில் நவராத்திரியின் மூன்றாவது நாளில் துர்கா தேவியின் மூன்றாவது வடிவமான மா சந்திரகாண்டாவை வழிபடுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வடிவம் அமைதி, தைரியம் மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தங்கம் போன்ற பளபளப்பான உடலுடன் , நெற்றியில் மணி வடிவ பிறை நிலவுடன் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் சந்திரகாண்டா என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
தனது பத்து கைகளிலும் பல்வேறு ஆயுதங்களை ஏந்தி, புலி மீது அமர்ந்திருக்கும் அவரது பிரகாசமான வடிவம், வீரத்தை பசைசாற்றுகிறது. கழுத்தில் வெள்ளை நிற மலர் மாலையை அணிந்துள்ள சந்திரகாண்டாபோருக்கு எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை குறிப்பதாக அமைந்துள்ளது. அதே வேளையில், தனது பக்தர்களிடம் கருணையும், சாந்தமும் கொண்டவளாகவும் திகழ்கிறாள்.
Also Read: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
அன்னையின் நெற்றியில் இருக்கும் மணி வடிவ பிறையில் இருந்து எழும் சத்தம் எதிர்மறை சக்திகள் மற்றும் அசுரர்களை பயமுறுத்தும் என நம்பப்படுகிறது. இந்த ஒலி பக்தர்களை தீய சக்திகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. யார் ஒருவர் அன்னையை வழிபடுகிறார்களோ, இந்த தெய்வீக ஒலி அவர்களைப் பாதுகாக்க எதிரொலிக்கிறது என்று நம்பப்படுகிறது.
சந்திரகாண்டாவை வழிபடுவதன் மூலம் உடலில் இருந்து கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளி கதிர்வீச்சு வெளிப்படுவதாக ஐதீகம் உள்ளது. இது சுற்றியுள்ள மக்களுக்கு அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் வழங்கும் என நம்பப்படுகிறது.
வழிபாட்டின் முக்கியத்துவம்
சந்திரகாண்டாவை வழிபடுவதன் மூலம், பக்தருக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது தீராத எண்ணமாக உள்ளது. அவளுடைய ஆசிகள் கிடைத்தால் நம்மில் உள்ள பாவங்களும் தடைகளும் நீங்குகின்றன என சொல்லப்படுகிறது. அதேசமயம் தைரியம், அச்சமின்மை, பணிவு மற்றும் மென்மை ஆகியவை உருவாகும் என நம்பப்படுகிறது. அவரது ஆளுமையில் பிரகாசம், ஈர்ப்பு மற்றும் இனிமை தானாகவே ஒருவருக்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
Also Read: நவராத்திரி தொடங்கும் முன் வீட்டுக்கு கொண்டு வரவேண்டிய பொருட்கள்!
இந்த நாளில், சந்திர காண்டா அன்னையை நாம் தூய நீர் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது, பூக்கள், அரிசி, குங்குமம் ஆகியவற்றை அர்ச்சனை செய்ய வேண்டும். குங்குமப்பூ-பாலால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது கீர் போன்ற பொருட்களை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். அதுமட்டுமல்லாமல் சந்திரகாண்டாவுக்கு பிடித்த வெள்ளை தாமரை, சிவப்பு அல்லது மஞ்சள் ரோஜா மாலையை வழங்குவது சிறப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.